(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

பார்த்துவிட்டாள் சரி அவளிடம் சென்று பேசலாம் என வருகையில் தொய்வான முகத்துடன் கண்ணகியிடம் வந்து நின்றான் கோவலன், அவன் வரவும் மாதவி சட்டென நின்றுவிட்டு நடப்பதை கவனிக்கலானாள்.

  

கோவலனோ கண்ணகியிடம்

  

”என்னை கல்யாணம் செய்துக்கறியா” என கேட்க அதைக்கேட்டு அவளுக்கு ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வந்தது மாதவியின் கண்கள் கலங்கிவிட்டது. கண்ணீர் அவளுக்கே தெரியாமல் கோடு போல கன்னத்தில் கோலமிட்டது. கோவலனும் தன் மனதை கல்லாக்கிக் கொண்டே இவ்வாறு கேட்க பதிலுக்கு கண்ணகி முடியாது என்பாள் என ஒரு நப்பாசையுடன் அவளை ஏக்கமாக பார்க்க அவளோ சிரித்த முகத்துடன்

  

”சரி” என்றாள்

  

அவ்வளவுதான் கோவலனுக்கு மின்னல் தாக்கியது போல இருந்தது அந்த அதிர்வுடனே எதேச்சையாக திரும்பியவன் மாதவியைப் பார்த்துவிட்டான், கண்கள் கலங்கி கண்ணீருடன் நின்ற மாதவியைக்கண்டு விக்கித்துப் போனான், மாதவியோ கோவலன் தன்னை பார்ப்பதை கண்டதும் அவசர அவசரமாக தனது கண்ணீரை துடைத்துவிட்டு அப்படியே அவ்விடம் விட்டு அவசரமாக கிளம்பிச் சென்றாள்.

  

மாதவி சென்றது கோவலனுக்கு ஆயாசத்தை தந்தது, தன் வாழ்க்கையை வெறுத்தான். கண்ணகியோ ஈஸ்வரமூர்த்தியிடம் சென்று கோவலன் தன்னிடம் இவ்வாறு கேட்டதை சொல்லி மகிழ அவரும் மகிழ்ந்தார்.

  

அந்த மகிழ்ச்சியிலேயே அவரின் உடல்நிலை சரியானது, மறுநாளே டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்து சேர்ந்தவர் உடனே கல்யாண வேலைகளில் இறங்கினார், தாத்தாவிற்காக சம்மதம் சொன்னானே தவிர கோவலன் மகிழ்ச்சியாக இல்லை, கல்யாண விசயத்திலும் அவன் கலந்துக் கொள்ளவில்லை, அனைத்தையும் ஈஸ்வரமூர்த்தியே பார்த்துக் கொண்டார்.

  

திருமண பத்திரிகை அடிப்பது முதல் மண்டபம் பார்த்து துணிமணி எடுத்து நகை நட்டு தாலி உட்பட அனைத்தையும் அவரே முன் இருந்து செய்தார், அதற்கே நாட்கள் வேகமாக சென்றது.

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.