”தாத்தா என்னை கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ்” என கைகூப்பி சொல்லிவிட்டு அவன் சென்றுவிட ஈஸ்வரமூர்த்திக்கு திக்கென்றது
அந்த கவலையிலேயே அவர் இருக்க, மறுநாள் காலையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது, அவசர அவசரமாக அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்தார்கள்.
ஒரு மாதமாக கல்லூரியை பார்த்துக் கொண்டதால் ஏற்பட்ட அலைச்சல் டென்ஷன் அனைத்தும் சேர்ந்து அவரை நோயாளியாக்கியது, கோவலனுக்கு பயமே எழுந்தது, தன்னால்தான் தாத்தாவிற்கு இந்த நிலைமை என நினைத்து கலங்கிப் போனான், இந்த விசயம் கண்ணகியின் காதில் எட்டியதும் அவள் உடனே ஆஸ்பிட்டலுக்கு வந்தாள்.
அங்கு கோவலன் கவலையாக இருக்கவே அவனிடம் சென்றவள்
”இப்ப உங்க தாத்தா எப்படியிருக்காரு” என கவலையாக கேட்க அவனோ
”தெரியலை எனக்கு ரொம்ப பயமாயிருக்கு கண்ணகி எப்படியாவது என் தாத்தாவை காப்பாத்திடு ப்ளீஸ்” என கைகூப்பி கெஞ்ச அவளுக்கு திக்கென்றது.
அவளே மருத்துவரிடம் சென்று பேசினாள்
”என்னாச்சி டாக்டர் அவர் எப்படியிருக்காரு”
”பயப்படாதீங்க, அவர் உடல் சோர்வா இருக்கு, வயசாயிடுச்சி, ஓய்வு எடுக்க வேண்டிய வயசுல அவரோட ஆரோக்கியத்தை பொருட்படுத்தாம கஷ்டமான வேலைகளை செய்திருக்காரு, அதனால உடல்நிலை மோசமாயிருக்கு, அவருக்கு இப்போதைக்கு ஓய்வு தேவை எந்தளவுக்கு அவர் நிம்மதியா ஓய்வு எடுக்கறாரோ, அந்த அளவுக்கு அவர் உடல் ஆரோக்கியமா இருக்கும்” என சொல்ல கோவலன் அதிர்ந்தான்
”எப்ப டிஸ்சார்ஜ் செய்யலாம்”