(Reading time: 26 - 51 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

கோவலனுக்கு உயிர்ப்பே இல்லை, ஜடம் போல அலைந்தான் எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான், அவனது நிலைமையை பார்த்தும் புரிந்தும் அதற்காக ஈஸ்வரமூர்த்தி இரக்கம் காட்டவில்லை, எல்லாம் கண்ணகி அவன் மனதை மாற்றிவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவரும் தைரியமாக அனைத்து வேலைகளையும் செய்யலானார்.

  

மறுநாள் ரிசப்ஷன் என்ற நிலையில் கோவலன் எதையோ பறிகொடுத்தது போல இருந்தான். அவனுக்கு எதுவும் பிடிக்கவில்லை, தாத்தாவிடம் தர்க்கம் செய்ய மனம் வரவில்லை, அவருக்கே உடல்நிலை சரியில்லை என்ற நிலையில் ஏனோதானோவென ரெடியாகி மண்டபத்திற்கு வர அங்கு ஏகப்பட்ட கூட்டம், அவனது பிசினஸ் வட்டாரத்தை விட கல்லூரி மாணவர்களின் வரத்து அதிகமாக இருந்தது.

  

கண்ணகி கூட நேரத்தோடு வந்திருந்தாள், கோவலன் வரவும் அவனை அனைவருமே வரவேற்றார்கள், மேடையில் கோவலனும் கண்ணகியும் வந்து நின்றதும் மாணவர்கள் மத்தியில் பாட்டும் நடனமும் அரங்கேறியது, நான்கு வரிகள் நான்கு வரிகள் என்றே ஒவ்வொரு மாணவர்களும் குழுகுழுவாக பிரிந்து பாடி ஆடி அசத்தினார்கள், அதைக்கண்டு கண்ணகி மகிழ்ந்தாள் கோவலனுக்கு எதிலும் நாட்டமில்லை விதியே என நின்றிருந்தான்.

  

கண்ணகியின் அழைப்பிற்கு இணங்க மாதவியும் வந்திருந்தாள் ஒரு ஓரமாக அவள் இருந்தாள் அவள் வந்ததை கூட கோவலன் அறியவில்லை.

  

ஆடல் பாடல் முடிந்ததும் அனைவரும் மணமக்களுக்கு கிப்ட் மொய் என தர தொடங்கினார்கள், கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது. அதன்பின் விருந்து அதன்பின் ஓய்வு மறுநாள் விடிகாலையில் திருமண ஏற்பாடுகள் நடந்தது கண்ணகிக்கு துணையாக மாதவி இருந்தாள், அவளை அழகாக அலங்காரம் செய்தாள். கோவலனுக்கும் அவனது சொந்தக்காரர்கள் அலங்காரம் செய்தார்கள் தாத்தாவிற்கு ஒரே சந்தோஷம் தனது ஒரே பேரனது திருமணத்தை கோலாகலமாக நடத்தினார். 20 வயது குறைந்து விட்டது போல துள்ளிக்குதித்து வேலைகளை எடுத்துப் போட்டு செய்தார்.

  

ஐயரும் சரியான நேரத்தில் மணமக்களை அழைக்க கண்ணகியும் கோவலனும் மேடையில்

2 comments

  • அன்று நடந்த விபத்தும் சரி, இப்போது கண்ணகியை மிரட்டினதும் அடுத்தவங்களை யோசிக்காம போன நடத்தையால்தான். மறுபடியும் பெரிய விபத்தை சந்திக்க போகிறான்.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.