தாத்தாவே அவளை அழைத்துக் கொண்டு கோவலன் அறையில் விட்டார். அவளோ தாத்தாவைப் பார்த்து அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றாள்
”பதினாறும் பெற்று பெருவாழ்வும் வாழு” என ஆசிர்வதித்தவர் அவளிடம்
”எவ்ளோ பெரிய கஷ்டம் வந்தாலும் சரி உயிரே போற அளவுக்கு துக்கம் நடந்தாலும் சரி ஒருபோதும் நீ உன்னை மாத்திக்காத, கோவலனோட சேர்ந்து வாழத்தான் நீ முயற்சி செய்யனுமே தவிர அவனை விட்டு நீ பிரியக்கூடாது“
”ஏன் இப்படி பேசறீங்க”
”சத்தியம் செய்யம்மா கண்ணகி”
”ஆனா தாத்தா”
”சத்தியம் செய்” என சொல்லி கையை நீட்ட அவளும் அவரின் உள்ளங்கையில் கை வைத்து சத்தியம் செய்து
”நான் அவரைவிட்டு பிரியமாட்டேன், அப்படி பிரியற தருணம் வந்தா அது என்னோட மரணமாதான் இருக்கும்” என சொல்ல அதைக்கேட்டு ஆனந்தக்கண்ணீருடன் அவ்விடம் விட்டு சென்றார்.
அவர் சென்றதும் கதவை சாத்தி தாள்பாள் போட்டுவிட்டு உள்ளே வந்த கண்ணகி கோவலனை தேட அவனோ ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தான், அவனிடம் சென்று வெட்கத்துடன் தொண்டையை செரும அதில் கவனம் கலைந்த கோவலன் அவளை ஏற இறங்கப் பார்த்தான்
வெட்கத்துடன் புது வாழ்க்கை ஆரம்பிக்க ஆசையுடனும் ஆர்வத்துடனும் வந்தவளை பார்த்து அவனுக்கு இரக்கம் பிறக்கவில்லை, மாறாக அவனுக்கு வெறுப்பே உதித்தது. சட்டென முகத்தை திருப்பிக் கொண்டான், அவளோ அவனிடம் எந்த பேச்சும் இல்லாமல் போக அவளே