Desire is the root cause of all evil என்பது எவ்வளவு உண்மை!
சத்யாவிடம் விபரத்தை சொல்லி வைக்கலாம் என்று தோன்ற மீண்டும் மொபைல் ஃபோனை கையில் எடுத்தாள். அது உயிருடனே இல்லை. வரும் போது வழிக் கண்டுப்பிடிக்க ஜி.பி.எஸ் பயன்படுத்தி இருந்தாள். அதனால் மொபைல் பேட்டரி தீர்ந்துப் போய் விட்டிருக்கிறது. அப்போதே சார்ஜும் செய்திருக்க வேண்டும். தன்னையே நொந்துக் கொண்டு மொபைலை கார் சார்ஜரில் மாட்டி வைத்தாள். இந்த சார்ஜர் வேறு ஸ்லோமோஷனில் சார்ஜ் செய்யும்! மறக்காமல் புது கார் சார்ஜர் வாங்க வேண்டும் என தன் மெமரியில் நோட் செய்து வைத்துக் கொண்டாள் சக்தி!
வந்த வழி அவளின் நினைவில் இருந்தது. அதன் படி ஜீப்பை இப்போது செலுத்தினாள். வரும் போது ஒட்டிய வேகத்தில் ஜீப்பை ஓட்டினால் இரவு ஏழு, ஏழரை மணிக்கு மதியூரை அடைந்து விடலாம்.
சாலையில் கவனத்தை பதித்து ஜீப்பை ஓட்டினாள்.
🌼🌸❀✿🌷
டப் டப் டப்!
சின்ன சத்தம்! சவிதாவிற்கு எங்கே இருந்து சத்தம் வருகிறது என்று தெரியவில்லை. எட்டிப் பார்த்தாள். ஹாலில் அவளுடைய கணவனும், மகனும் மும்முரமாக கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இங்கே இருந்து சத்தம் வந்திருக்க வாய்ப்பில்லை. இன்னொரு பக்கம் இருந்தா வந்தது???
அது சாலை இருக்கும் பக்கம் அல்லவா? ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்.
அஹல்யாவின் வீடு வெறிச்சென்று இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக அந்த இடத்தில நின்றிருந்த கான்ஸ்டபிளை இப்போது காணவில்லை. அன்று கோவிலுக்கு வரும்