(Reading time: 25 - 50 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

  

”இல்லை என் மனசுல நீங்க இல்லை”

  

”பொய் எனக்குத் தெரியும் உன்னை ஏன் ஏமாத்திக்கற நான்தான் என் வாழ்க்கையை தொலைச்சிட்டேன் நீயும் தொலைக்காத என்னை ஏத்துக்க மாதவி“

  

”முடியாது நீங்க வேணா துரோகியா இருக்கலாம் ஆனா என்னால அப்படியிருக்க முடியாது”

  

”இதுல துரோகத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கு உண்மையை சொல்லிட்டுதான் நான் இங்க வந்தேன், கண்ணகியும் இந்நேரம் புரிஞ்சிக்கிட்டு இருப்பா இனி நான் அங்க போறதாயில்லை, வாழ்வும் சாவும் உன்னோடதான்” என சொல்லி இன்னும் இறுக்கமாக அணைக்க அவளுக்கு என்ன செய்வதென தெரியாமல் சிலையாக நின்றுவிட்டாள்.

  

இந்த அற்புத காட்சியை கண்ட சிலம்பரசனுக்கு மகுடம் சூட்டியது போல மகிழ்ச்சியில் பொங்கினான்

  

”இது போதும், இந்த ஒண்ணு வைச்சே நான் எப்படி காயை நகர்த்தறேன் பாரு எப்படியாவது  கோவலனோட கல்லூரிக்கு நான் பிரின்சிபால் ஆவேன்” என நினைத்தபடியே சந்தோஷமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

  

கோவலனோ மாதவியை விடவில்லை, அவளோ அவனை ஏற்க தயங்கினாள். அந்த இரவு பொழுதை அந்த வீட்டிலேயே கழித்தான், விடிந்ததும் அவனை அனுப்ப எண்ணினாள் மாதவி ஆனால் அவனோ முடியாது என அடமாக அமர்ந்துவிட அவளுக்கு திக்கென்றது

  

மறுபக்கம் கோவலன் வராமல் போக கண்ணகிக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது, தாத்தாவிற்கும் கோவலனின் செயல் பேரடியாக மாறியது, அவனை தேடுவதற்கு ஆளை வேறு அனுப்பி வைத்தார், ஆனால் அவன் எங்கு இருக்கிறான் என்ற தகவல் இன்னும் வந்து சேர்ந்தபாடில்லை, மாதவி வீட்டில் கோவலன் நிம்மதியாக உறங்கிப் போனான் ஆனால் மாதவி உறங்காமல் தவித்துப் போனாள்.

  

One comment

  • கோவலனை பிச்சகாரனாக்கி அலையவிடுங்க. அப்படியாவது புத்தி வருதுன்னு பாக்கலாங

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.