(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

இருக்கு தெரிஞ்சிக்க“

  

”என்னத்த அனுபவமோ, ஒன்வேல வந்தது நீ என்னை திட்டற இதுதான் உன்னோட 5 வருஷ அனுபவமா, உன்னையெல்லாம் வேலைக்கு வைச்சாங்களே அவங்களை சொல்லனும் அதுசரி உன்னை வேலைக்கு வைச்சிருக்காங்கன்னா கண்டிப்பா அவங்களுக்கு புத்தியிருக்காது சரியான மாங்கா மடையன்களாதான் இருக்கனும்” என நக்கலாக பேச அதைக்கேட்டு டிரைவருக்கு அதிர்ச்சியும் பயமும் வந்தது.

  

சட்டென கார் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்கவும் இருவருமே என்னவென திரும்பிப் பார்க்க அந்த காரில் இருந்து கம்பீரமாக சங்கமேஸ்வரன் இறங்கி நின்றார். அவரைக் கண்டதும் டிரைவர் பதட்டமாகி அவரிடம் சென்று

  

”ஐயா ஒண்ணுமில்லைங்கய்யா இதோ இப்பவே காரை எடுக்கறேன், நீங்க உள்ள உட்காருங்கய்யா” என சொல்ல அவரோ கோபத்தில் அவனது கன்னத்தில் விட்டார் ஒரு அறை

  

”இது ஒன்வேன்னு தெரிஞ்சும் எதுக்காக இந்த வழியா வண்டியை ஓட்டிட்டு வந்த, உன்னால தேவையில்லாம எனக்கு கெட்டபேர் வந்துடுச்சி, இனி உனக்கு என்கிட்ட வேலையில்லை போ” என சொல்ல டிரைவர் பதறினான்

  

”ஐயா மன்னிச்சிடுங்கய்யா தெரியாம செய்துட்டேன்யா” என கெஞ்ச அவர் அசையவில்லை

  

”உன்னை போன்னு சொல்லியாச்சி, உன்னோட சம்பளம் வீடு தேடி வந்துடும் போ அப்படி” என அவனை தள்ளிவிட அவனோ ஏற்கனவே இருந்த பதட்டத்தில் அவர் தள்ளிய தள்ளுக்கு தெருவில் விழுந்தான்.

  

சங்கமேஸ்வரனே காரை சுற்றி வந்து நாச்சியா முன் நின்றார் கோபமாக, அவளோ இயல்பாக அவளது சைக்கிளை எடுத்து அதில் ஏதாவது குறையிருக்கறதா என ஆராய்ந்துவிட்டு தன்முன் நின்ற சங்கமேஸ்வரனை பார்த்து துணிச்சலாக நின்றாள்.

  

அவ்வழியே போவோர் வருவோர் அனைவரும் சங்கமேஸ்வரனை கண்டதும் மரியாதையாக வணக்கம் வைத்தார்கள். ஆனால் நாச்சியா வணக்கம் வைக்கவில்லை அதுவே அவரின்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.