அங்கமுத்து எந்த நாள் எவ்வளவு பணம் கஜானாவில் இருந்து எடுத்துக் கொண்டார் என்பதை தெளிவாக எழுதியிருந்தாள் நாச்சியா. அந்த கணக்குகளை கண்டு நடுநடுங்கிப் போன அங்கமுத்துவோ அகத்தியனை பார்த்து
”இது வந்து சுத்த பொய்” என திணற
”என்னை ஏமாத்தி கஜானாவில இருந்து நீங்க எடுத்த ஒன்னே முக்கால் கோடியை எப்ப தரப்போறீங்க மாமா” என கேட்க அங்கமுத்துவின் நாக்கு வறண்டது”
”ஒரு மாசம் டைம் தரேன், நீங்க எடுத்த பணத்தை எடுத்த இடத்திலயே வைச்சிடனும்”
”பணமா எந்த பணம் என்கிட்ட எதுவும் இல்லை அகத்தியா”
”அப்போ ஒன்னே முக்கால் கோடியை செலவு செய்துட்டீங்களா”
”அது வந்து வந்து”
“எப்படி எனக்கே இப்படி துரோகம் இழைக்க முடிஞ்சது, இதுக்குதான் நான் கார்மெண்ட்ஸ் திறந்ததும் வலுக்கட்டாயமா என்கூட துணையா இருக்கேன்னு தாத்தாவை நம்ப வைச்சி வந்தீங்களா, உங்களை மலை போல நம்பி கஜானா பொறுப்பை தந்தேன் அதுக்கு நீங்க எனக்கு காட்டற விசுவாசம் இதுதானா மாமா” என கோபத்தில் வெடிக்க
”அகத்தியா கோபப்படாத நான் என்ன மூணாவது ஆளா உன்னோட மாமா எனக்கு பணம் எடுக்க உரிமையில்லையா“
”ஓ உரிமையிருக்கு, அதெல்லாம் வீட்லதான், இது என்னோட கார்மெண்ட்ஸ் இங்க நான் பணம் எடுத்தா கூட கணக்கு சொல்லிட்டுதான் எடுப்பேன் ஆனா, நீங்க என் பேரை சொல்லி பணத்தை எடுத்திருக்கீங்க, உங்களை எப்படி சும்மா விடறது முதல்ல இந்த விசயத்தை தாத்தா கிட்ட சொல்லனும்”