(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”அய்யோ அப்படி மட்டும் செய்துடாத அகத்தியா, அப்புறம் என்னை வீட்டை விட்டே விரட்டிடுவாங்க”

  

”விரட்டட்டுமே அதான் ஒன்னே முக்கால் கோடியை எடுத்து வைச்சிருக்கீங்களே அதை வைச்சி மிச்ச வாழ்க்கையை வாழ்ந்துக்குங்க”

  

”வேணாம் அப்படி செய்யாத நான் பாவம் உன் அத்தை வாழ்க்கையை நினைச்சிப்பாரு”

  

”என் அத்தைக்கென்ன அவங்களை மகாராணி போல என் தாத்தா பார்த்துக்கறாரு, அவங்களுக்காகலாம் உங்களை என்னால மன்னிக்க முடியாது. இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா இந்த ஃபைலை தாத்தாகிட்ட அத்தைகிட்ட வீட்ல இருக்கற எல்லார்கிட்டயும் நான் காட்டத்தான் போறேன்” என்றான் உறுதியாக அதில் அங்கமுத்து ஆடிப்போனார்.

  

அகத்தியன் அந்த ஃபைலை வாங்கி பத்திரப்படுத்த அங்கமுத்துவோ அவனிடம் கெஞ்சினார் பலனில்லை

  

”போதும் மாமா இனியும் உங்களை கார்மெண்ட்ஸ்ல வைச்சிருந்தா உங்களால நான் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும், இனி நீங்க கார்மெண்ட்ஸ்க்கு வரவேணாம்”

  

”என்னை வேலையை விட்டு தூக்கிட்டியா”

  

”ஆமாம் எப்ப உங்களை பத்தின உண்மை தெரிஞ்சதோ அப்பவே இந்த முடிவை எடுத்துட்டேன், இதுக்காக நான் கொஞ்சம் கூட யோசிக்கலை நீங்க போகலாம்” என்றான் அதிகாரமாக அங்கமுத்துவிற்கு கோபமும் ஆத்திரமும் தலைக்கேறியது

  

”அகத்தியா வீணா என்னை பகைச்சிக்காத, அது உனக்கு நல்லதில்லை”

  

”நல்லது எது கெட்டது எதுன்னு எனக்கு நல்லாவே தெரியும் நீங்க போகலாம்” என்றான் அதில் அவமானப்பட்ட அங்கமுத்து அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.