(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”மண்டையை பிச்சிக்காதீங்க சார் ஒரு நாள் இல்லை ஒருநாள் இப்படியொரு நிலைமை வரும்னு எதிர்பார்த்ததுதான் பொய்யான கணக்கு வழக்குகளை நான் ஆடிட்டர் மூலமா சொல்லி ஏற்பாடு செய்து தயாராக்கி அங்கமுத்து சார் கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்”

  

”முன்னேற்பாடோட நீ இந்த விசயம் செய்திருக்க ஆனா, இன்னிக்கு ரெய்டு வர்றதுக்குள்ள எப்படி உன்னால கணக்கு வழக்குகளை சரியாக்க முடிஞ்சது”

  

”அது சுலபம் சார் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் கிட்ட இங்க வரிஏய்ப்பு நடக்கறதா தகவல் சொன்னதே நான்தான்” என இயல்பாக சொன்ன நாச்சியாவை மிரட்சியுடன் பார்த்தான்

  

”நீயா ஏன் இப்படி செய்த”

  

”பின்ன இருக்கறதெல்லாம் உங்க மாமா காலி பண்ணிட்டா, அப்புறம் கார்மெண்ட்ஸ் நஷ்டத்தில போய் இங்க வேலை செய்ற 100 ஆட்களும் நடுத்தெருவுக்கு வருவாங்க, அதனாலதான் இந்த முடிவை நான் எடுத்தேன்”

  

”யார் உனக்கு அதிகாரம் தந்தது இந்த முடிவு எடுக்க இது துரோகம் இல்லையா“

  

”நான் இங்க வேலை செய்றேன், விசுவாசி, கார்மெண்ட்ஸை காப்பாத்த நான் என் உயிரையும் தருவேன்” என சொல்ல அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது

  

”ஒரு பக்கம் விசுவாசி இன்னொரு பக்கம் துரோகி, இதுல உன்னை நான் எப்படி புரிஞ்சிக்கறது”

  

”என்னை நீங்க புரிஞ்சிக்கறது அப்புறம் முதல்ல இந்த கார்மெண்ட்ஸை காப்பாத்தற வழியைப் பாருங்க சார் நான் வரேன்” என கம்பீரமாக சொல்லிவிட்டு எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றாள். அவள் சென்ற அடுத்த நொடி இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் மளமளவென கார்மெண்ட்ஸில் நுழைந்தார்கள். ஒரு மணி நேரம்தான் அந்த கார்மெண்ட்ஸே ஆட்டம் கண்டது, இறுதியில் வந்திருந்த அதிகாரிகள் கணக்குகள் சரியாக இருக்கிறதென திரும்பிச் சென்றார்கள்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.