செய்திருக்கலாமே“
”திருத்தம் பணத்தை நான் தரலை, அவரே எடுத்துக்கிட்டாரு அவர்கிட்டதானே கஜானா சாவி கொடுத்து வைச்சிருக்கீங்க, இந்த திருடன் கையிலயே சாவி தந்த மாதிரி தப்பெல்லாம் உங்களோடது”
”சரி இப்ப ரெய்டு நடந்தா என்னாகும்”
”கணக்குல வராத பணத்துக்கு ஆதாரம் கேட்பாங்க, தர முடியலைன்னா கைது நடவடிக்கை செய்வாங்க”
”கைதா”
”ஆமா வரி ஏய்ப்பு செய்ததா“
”நிறுத்து நான் வரியை ஒழுங்கா கட்டறேன்”
”கட்டறதா நீங்க நினைச்சீங்க ஆனா? இதுவரைக்கும் முழுசா வரியை கட்டினதில்ல, அதிலயும் தில்லுமுல்லு நடந்திருக்கு”
”யார் காரணம்”
”உங்க மாமா”
”மாமா மாமா மாமா இந்த விசயத்தை ஏன் என்காதுக்கு எட்டல”
”யாரும் சொல்ல விடலை”
”ரெய்டு நடக்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு, இப்போதைக்கு ரெய்டு பிரச்சனையை முடிச்சிட்டு அப்புறம் மாமாவை கவனிக்கிறேன்? இப்ப கணக்கு வழக்குகளை சரியாக்கனுமே எப்படி சரியாக்கறது”