(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”பார்த்து பேசுங்க சின்னய்யா உங்க அத்தை வாழ்க்கை கேள்விகுறியாயிடப் போகுது”

  

”அதை பார்த்துதானே இத்தனை வருஷமும் வீட்டோட மாப்பிள்ளையா அவரை வீட்டுக்குள்ள வைச்சிருக்காரு என் தாத்தா, பாவம் அவருக்குதான் என் மாமனை பத்தி தெரியலை, இங்க நடக்கறதை பத்தி சொன்னா தாத்தா கலங்கிடுவாரு”

  

”எதுக்கும் ஜாக்கிரதை சின்னய்யா, என்னதான் உறவுமுறையா இருந்தாலும் சில உறவுகள் என்னிக்குமே ஆபத்துதான்” என சொல்லிவிட்டு அவர் வெளியேறி சென்று சில நிமிடங்கள் கழித்தே மகிழ்வுடன் வந்து இருக்கையில் அமர்ந்தார் அங்கமுத்து

  

”அகத்தியா தப்பிச்சிட்டோம் இல்லைன்னா என்ன ஆயிருக்கும்”

  

”நீங்க ஜெயிலுக்கு போயிருப்பீங்க மாமா”

  

”எது நானா ஜெயிலா என்ன சொல்ற அகத்தியா”

  

”பின்ன என் பேரை சொல்லி அடிக்கடி கஜானால இருந்து பணத்தை எடுத்துக்கிட்டு போறீங்களே”

  

”அதுவா சே சே நானா நான் அப்படி எல்லாம் செய்வேனா இதப்பாரு அக்கவுண்ட் பைலை எல்லாம் சரியா இருக்கும் பாரு” என சொல்லி ஒரு சிகப்பு நிற ஃபைலை தர அகத்தியன் அதை வாங்கி அப்படியே அங்கு டேபிளுக்கு பக்கத்தில் இருந்த குப்பை தொட்டியில் போட்டான். அதைக்கண்டு அங்கமுத்து அதிர அகத்தியனோ உண்மையான அக்கவுண்ட் ஃபைலை அவரிடம் நீட்டி

  

”இதைப் பாருங்க மாமா உண்மையான அக்கவுண்ட் ஃபைல், சும்மா பிரிச்சி பாருங்க, என்னை நம்ப வைச்சி நீங்க எவ்ளோ பணத்தை கொள்ளையடிச்சீங்கன்னு அதுல இருக்கும் பாருங்க மாமா” என நாச்சியா தன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்ற உண்மையாக அக்கவுண்ட் ஃபைல்லை தர அங்கமுத்து அச்சத்துடனே அந்த ஃபைலை வாங்கி பிரித்துப் பார்த்தார்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.