அவர்கள் சென்றபின்புதான் அகத்தியனுக்கு நிம்மதியே வந்தது.
மேனேஜர் குமரப்பன் அகத்தியனிடம் வந்து
”சின்னய்யா இனி எந்த பிரச்சனையும் இல்லை, யாரோ வேணும்னே உங்க வளர்ச்சியை கெடுக்க இப்படி செய்திருக்காங்க“
”அது யார்ன்னு எனக்குத் தெரியும்”
”தெரியுமா யார் அவங்க”
”நாச்சியா”
”அவளா நினைச்சேன், சரியான துணிச்சல்காரி, துடுக்கத்தனம் அதிகம் அடிக்கடி சொல்லிகிட்டே இருந்தா இன்னிக்கு செய்து காட்டிட்டாளே” என சொல்ல அகத்தியனுக்கு சிரிப்பாக இருந்தது
”ஆக என்னைத் தவிர எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு போல“
”சின்னய்யா அப்படியெல்லாம் இல்லை, நாச்சியா சின்ன புள்ளை, அவள் சொன்னதை நான் பெரிசா எடுத்துக்கலை”
”ஆனா அவள் சொன்னதை செய்து காட்டிட்டாளே”
”அவள் அப்படிதான், அப்படியே உங்களை போல ஒரு முடிவு எடுத்தா அதிலிருந்து பின்வாங்க மாட்டா தங்கமான பொண்ணு”
”அவளை பாராட்டினது போதும், நீங்க போய் என் மாமனை அனுப்புங்க, அவர்கிட்ட நான் கொஞ்சம் பேசனும்“