(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சிதறியது.

  

”எஸ் கம் இன்” என்றான் சத்தமாக, அதில் அறைக்கதவை திறந்தபடி உள்ளே வந்தாள் நாச்சியா, கார்மெண்ட்சில் வேலை செய்பவர்களுக்கு யூனிபார்ம் தரப்பட்டிருந்தது, அனைவரும் ஒன்று போல இருக்க வேண்டும் என்றும் துணி விசயத்தில் கூட ஏற்ற தாழ்வு இருக்க கூடாது என அகத்தியனே தன்னிடம் வேலை செய்யும் அனைவருக்கும் யூனிபார்ம் முறையை கொண்டு வந்திருந்தான்.

  

அந்த யூனிபார்மில் மிடுக்காக வந்தாள் நாச்சியா

  

”நீங்க” என அகத்தியன் கேட்க அவளோ ஒரு நொடி வியந்து பின்

  

”அக்கவுண்டன்ட்” என்று சொல்லியபடியே அங்கிருந்த இருக்கையில் அமர அவனுக்கு ஆச்சர்யம் ஆனாலும் அவனுக்கு அது பிடித்திருந்தது

  

”உங்களை நான் இதுக்கு முன்னாடி எங்கயும் பார்த்ததில்லை“

  

“காருக்குள்ளயும் அறைக்குள்ளயுமே அடைஞ்சிகிடந்தா வெளி உலகம் எப்படி தெரியும் நான் இந்த கார்மெண்ட்ஸ்ல 3 வருஷமா வேலை செய்றேன் சார்” என்றாள் அவள் சார் என அழைத்த விதம் அவனை கவர்ந்தது, அதில் ஒரு நக்கல் தொணித்தது

  

”உன் பேர் என்ன”

  

”நாச்சியா”

  

”நாச்சியா ம்ம் எங்கயோ கேட்ட மாதிரியிருக்கு”

  

”இருக்கும் இருக்கும்” என்றாள் நக்கலாக, அவளின் இந்த நக்கல் பேச்சு ஏனோ அவனுக்கு கோபத்தை அளிக்கவில்லை மாறாக யோசிக்க வைத்தது

  

”இன்னிக்கு இன்கம்டாக்ஸ் ரெய்டு வர்ற விசயம் உனக்கு தெரியும்தானே”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.