(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”கீழவீதியை மேலவீதியாளுங்க தீயால எரிச்சிடுவானுங்கய்யா அதான் பார்க்கிறேன், எனக்கு ஒண்ணுன்னா நான் கவலைப்படமாட்டேன், என்னால எங்க ஆளுங்களுக்கும் ஆபத்துன்னா பயம் வரத்தானே செய்யும்” என சொல்ல அகத்தியனுக்கு அவனது பயம் புரிந்தது, உடனே அகத்தியனே அந்த பழைய டிரைவரை தேடிச் சென்றான்.

  

அந்த பழைய டிரைவரோ அசரவில்லை துணிச்சலாக நின்றான், அகத்தியன் அவனிடம் வந்ததும்

  

”உனக்கு இங்கென்ன வேலை“ என கேட்க அவனோ திமிராக பேசினான்

  

”இது தெரு, பொதுவழி நான் எங்க வேணா நிப்பேன் உங்களுக்கென்ன” அதைக்கேட்டு அகத்தியன் மென்மையாக சிரித்துவிட்டு அந்த பழைய டிரைவர் கன்னத்தில் விட்டான் ஒரு அறை அதில் அவன் ஆடிப்போனான்

  

”இந்த நக்கல் பேச்செல்லாம் என்கிட்ட வேணாம், இன்னொருமுறை உன்னையும் உன் கூட்டாளிகளையும் இந்த இடத்தில பார்த்தேன் பார்த்த இடத்திலயே குழி தோண்டி புதைச்சிடுவேன்”

  

”அந்த கீழவீதிக்காரனுக்காக என்னையே பகைச்சிக்கிறாங்களா, இதுக்கு பழிவாங்காம நான் விடமாட்டேன்” என கர்ஜனை செய்துவிட்டு அவன் தன் கூட்டாளிகளுடன் சென்றுவிட அகத்தியன் அவன் சொன்னதைக்கேட்டு வேடிக்கையாக எண்ணி காரிடம் வர வீராவோ

  

”சின்னய்யா ஏன்யா அவன்கிட்ட வலிய போய் மாட்டி பகையை உண்டாக்கிட்டீங்க, அவன் மோசமானவன்யா பழிவாங்காம விடமாட்டான்யா”

  

”பயப்படாத என்னை நம்பு அவனால உனக்கோ உன் குடும்பத்துக்கோ உன் ஆட்களுக்கோ எதுவும் நடக்காத மாதிரி நான் பார்த்துக்கறேன்” என சொல்ல வீராவோ பாதி பயத்துடனே வண்டியை ஓட்டினான்.

  

கார்மெண்ட்ஸில் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் வருகிறார்கள் என்ற செய்தி நன்றாகவே

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.