(Reading time: 28 - 55 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”என்னடா உளர்ற நம்மாளுங்களே நம்மளை வீழ்த்த நினைப்பாங்களா”

  

”சில சமயம் நம்ம ஆளுங்களையே நாம நம்பாம இருக்கறதுதான் புத்திசாலித்தனம் தாத்தா”

  

”உன்னை திருத்தவே முடியாது நீ வேணா பாரு இன்னிக்கு நடக்கற ஆடிட்டிங்ல கண்டிப்பா கீழவீதியாளுங்களாலதான் நீ மாட்டிக்கப் போற” என கடுமையாகச் சொல்ல அகத்தியனோ கலகலவென சிரித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறி காருக்கு வந்தான். அங்கு இருந்த வீராவோ கார் கதவை திறக்க காருக்குள் ஏறும் முன் எதேச்சையாக கேட்டைப் பார்க்க அங்கு கேட்டிற்கு வெளியே பழைய டிரைவர் தன்னுடன் 2 ஆட்களை வைத்துக் கொண்டு ஏதோ கதை பேசுவது போல வீராவையே கண்காணித்தப்படி இருக்க அதைக் கண்டு வீரா பயத்துடன் இருக்க அகத்தியனோ

  

”வீரா பயப்படாத அவனுங்களால உன்னை எதுவும் செய்ய முடியாது“ அதற்கு வீரா

  

”சின்னய்யா நான் வேலைக்கு வந்த நாள்ல இருந்தே இவங்க என்னை கண்காணிக்கறாங்க, சாயங்காலம் வேலை முடிஞ்சி எங்க வீதிக்கு போற வரைக்கும் என்னை பின்தொடர்ந்து வர்றானுங்க, எனக்கு பயமாயிருக்கு சின்னய்யா” என சொல்ல

  

”பேருக்குதான் நீ வீரன், உண்மையிலயே நீ ஒரு கோழைதான் போல”

  

”அச்சோ சின்னய்யா என்ன இப்படி சொல்றீங்க நான் ஒண்ணும் கோழையில்லை“

  

”அப்புறம் ஏன் பயப்படற அவங்க உன்னை தாக்க வந்தா திருப்பி அடிச்சி போடு”

  

”அடிக்கறதெல்லாம் நான் செய்வேன் ஆனா, அதுக்கு அப்புறம் என்ன நடக்கும்னு நினைச்சாதான் குலையே நடுங்குது“

  

”என்ன நடக்கும்“

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.