சொல்ல முடியவில்லை... ஆனால் அவளுக்கு 'புதியவன்' ஆன அந்த தியாகுவிடம் அவளுக்கு என்னமோ ஒரு ஈர்ப்பு ஏற்பட தான் செய்தது...!
காரில் இருந்து இறங்கியதுமே மற்றவர்கள் அனைவரும் விஜய், வெற்றி மற்றும் டாக்டரிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க, தியாகுவின் கண்கள் மட்டும் அது எதையும் கண்டுக் கொள்ளாமல் சுழன்றன...
அவனின் பழுப்பு நிற கண்கள் சுழன்ற விதம் கிருத்திகாவின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகளை பறக்க செய்தது... இதுவரை உணர்ந்தே இருக்காத ஒரு இனிய உணர்வு அவளுக்குள் பரவியது...
இவன் அவளின் கணவன் என்றால் அவள் அதிர்ஷ்டசாலி தான்... சந்தேகமே இல்லை...
கிருத்திகாவின் மனம் நொடிகளில் பல எண்ணங்களுடன் சுழல... தியாகுவின் கண்கள் சுற்றி அலைந்ததை மிருதுளாவும் கவனித்தாள்...
தன் பின்னால் மறைந்து நின்றிருந்த கிருத்திகாவிடம் கிசுகிசுப்பான குரலில் மெல்ல பேசினாள் மிருதுளா...
“ஹேய், உன்னை தான் தேடுறார்... நீ என்ன இப்படி ஒளிஞ்சிட்டு நிக்குற, முன்னாடி வா...”
மிருதுளா சொன்னதோடு நிறுத்தாமல், கிருத்திகாவின் கையை பிடித்து முன்னே இழுத்தாள்...
வேறு வழி எதுவும் இல்லாமல், தயக்கத்துடன் முன்னே வந்தாள் கிருத்திகா...
"உன்னை தான் பார்க்கிறார் பார்...” மிருதுளா மீண்டும் ரகசியக் குரலில் கிருத்திகாவிடம் சொன்னாள்...
பயத்தில் இதயம் வேகமாக துடிக்க, கிருத்திகாவின் கண்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மீண்டும் தியாகுவின் பக்கம் சென்றது. அவர்கள் இருவரின் விழிகளும் சந்தித்துக் கொண்டன... மின்னல் தாக்கியது போல கிருத்திகாவினுள் மீண்டும் புது விதமான உணர்வு தோன்றியது...
“சித்தி, பிரின்சஸ் இதோ இருக்கா...” ஒரு ஆண் குரல் அறிவிக்க, அடுத்த வினாடி பலரும்