நடந்ததை எல்லாம் சொல்லி ஒரு புது கதையை உருவாக்கி உங்களை நல்லா குழப்பி உங்களாலயே எந்த முடிவும் எடுக்க முடியாம போய் இங்க ஓடிவந்திருக்கீங்க அதானே, இதப்பாருங்க நேராவே சொல்லிடறேன், என் மனைவி பேரு ஜானகி, ஆனா அவளுக்கு என்னை பிடிக்கலை அதனால அவள் என்னை விட்டுப் போயிட்டா, அதுக்காக உங்க பொண்ணை நான் ஏத்துக்க மாட்டேன்,
உங்க பொண்ணுன்னு இல்லை, நான் வேற எந்த பொண்ணையும் ஏத்துக்க மாட்டேன், ஏன்னா ஜானகி வேணா என்னை வேணாம்னு சொல்லியிருக்கலாம் ஆனா நான் அவளை என்னிக்குமே வேணாம்னு நினைச்சதில்லை, எப்படி பார்த்தாலும் அவள்தான் என் மனைவி, அவளுக்கும் மூர்த்திக்கும் கல்யாணமே ஆனாலும் நான் அவளை மறக்க மாட்டேன், எனக்குன்னு புது வாழ்க்கையையும் அமைச்சிக்க மாட்டேன்
கடைசி வரைக்கும் இப்படியே இருந்துடுவேன், இதையெல்லாம் சொன்னா உங்க பொண்ணு ஒத்துக்க மாட்டா, நீங்களாவது நான் சொன்னதைப் புரிஞ்சிக்கிட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறேன், உங்க பொண்ணு பேர் என்னால கெடக்கூடாது, தயவு செஞ்சி அவளை கூட்டிட்டு கிளம்புங்க இங்க எனக்கு நிறைய வேலைகள் இருக்கு” என அவன் மூர்த்தியை பார்த்தபடி கோபமாகச் சொல்ல மகேந்திரனோ
”என்ன வேலை உன் மனைவிக்கும் மூர்த்திக்கும் கல்யாணம் செய்து வைக்கற வேலையா”
”ஆமாம் அது என்னோட கடமை”
”உனக்கு வெட்கமாயில்லை”
“மனசுக்கு பிடிச்சவங்களுக்காக உசுரையே கொடுக்கலாம் இதுல வெட்கப்பட என்ன இருக்கு”
”உனக்காக என் பொண்ணு உசுரை கொடுத்தா என்ன செய்வ”
”யாரு உங்க பொண்ணா அதுக்கெல்லாம் வாய்ப்பில்லை, அது ஏதோ என்கிட்ட எதையோ