ஏத்துக்கலைங்கறப்ப நீ உசுரோட இருந்து என்ன பிரயோசனம், ஒண்ணு உன் காதல் உண்மைன்னு நிரூபிக்க உன் உசுரை கொடு, இல்லையா இதோட இவனை மறந்துட்டு என்கூட கிளம்பி வா, உனக்குன்னு ஒரு புது வாழ்க்கையை நான் அமைச்சித் தரேன், கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமா வாழ்வ” என சொல்ல மஹதியோ
”அப்பா என் காதல் உண்மையானது, அதை புரிஞ்சிக்கிட்டவங்க இங்க நிறைய பேர் இருக்காங்கப்பா, ஆனா நீங்க கூட என்னை புரிஞ்சிக்கலைன்னா எப்படிப்பா“
”எப்படி புரிஞ்சிக்கறது அடுத்தவளோட புருஷனை நீ விரும்பினா அது அசிங்கம் இல்லையா”
”ஆனா ஜானு அவரை வேணாம்னு சொன்ன பின்னாடிதான் நான் அவரை விரும்ப ஆரம்பிச்சேன்”
”வேணாம்னு வார்த்தையில சொல்லக்கூடாது, செயல்ல செய்திருக்கனும் முறையா அவங்களுக்கு டைவர்ஸ் நடந்திருக்கனும், அப்பதான் உன் பேச்சு செல்லும் அதோட உனக்கென்ன தலையெழுத்தா இரண்டாந்தாரமா வாக்கப்படனும்னு ஏன் ஆசைப்படற”
”அப்பா அவரு ரொம்ப நல்லவரு நல்ல மனசுள்ளவரு, அவரோட குணம்தான் எனக்கு பிடிச்சிருந்தது ஜானு பேச்சைக் கேட்டு இரக்கப்பட்டு எல்லாம் நான் அவரை விரும்பலை, அவரை பார்த்த அந்த நொடியே நான் என் மனசை இழந்துட்டேன்பா”
”ரொம்ப சந்தோஷம்மா, பெத்த அப்பன்கிட்ட எப்படி பேசற பாரு, மனசை இழந்துட்டாளாம், சே மனசை இழக்கறதுக்கு பதிலா உசுரை விட்டிருந்தா கூட எனக்கு கௌரவமா இருந்திருக்கும்”
”அப்பா” என அலறினாள்
”வாயை மூடு மஹதி, உன் ப்ரெண்ட்டுக்கு உதவி செய்ய வந்த, உதவிங்கற பேர்ல துரோகம் செய்திருக்க அது தப்பில்லையா”
”தப்புதான்ப்பா ஆனா நான் செய்த துரோகத்தால பாதிக்கப்பட்டது நான் மட்டும்தான்பா, அங்க பாருங்க ஜானு இப்ப கூட அவள் அந்த மூர்த்தி பக்கத்திலதான் இருக்காப்பா”