”அவள் எங்க இருக்காங்கறது இப்ப முக்கியம் இல்லை, நீ எங்க இருக்க அதான் முக்கியம், நீ ஒண்ணும் நீ விரும்பினவன் பக்கத்தில இல்லையே, உங்கம்மா பக்கத்திலதானே இருக்க”
”அது வந்து“
”காதல் என்ன விளையாட்டா போச்சா உனக்கு, நானும் உன் அம்மாவும் காதலிச்சி கல்யாணம் செய்துக்கிட்டோம், உண்மையா நேர்மையா நான் அவளை காதலிச்சதால அவளை பெத்தவங்க எங்க காதலை கொச்சைப்படுத்தாம எங்களை சேர்த்து வைச்சாங்க, அது காதல், நீயும் செய்றியே, சே உன்னை நினைச்சா வெட்கமாயிருக்கு” என சொல்ல மஹதி அழத்தொடங்கினாள்.
அவள் வேதனைப்படுவது கண்டு வேங்கையன் கூட சற்று மனம் இரங்கினான், ஆனாலும் அவளுக்காக துணையாக நின்று பேசவில்லை, அமைதியாக ஒதுங்கி நின்றான்.
மஹதிக்கு ஒன்று என்றதும் துடித்துப் போய் வந்தார் மங்களம்
”இதப்பாருங்க நீங்க பொண்ணை பெத்தவரா கூட இருக்கலாம், அதுக்காக நாக்குல நரம்பில்லாம பேசி வைக்காதீங்க, அவளை யார்ன்னு நினைச்சீங்க எங்க வீட்டு சின்ன மருமகள், இதுக்கு மேல எதையாவது பேசினீங்க அவ்ளோதான்” என மிரட்ட மகேந்திரனோ
”சின்ன மருமகளா யாரு என் பொண்ணா, ஓ அவளுக்கு உங்க பையனோட ரகசியமா கல்யாணம் கூட செய்து வைச்சிட்டீங்களா என்ன”
”கல்யாணம் ஆனாதான் அவள் எனக்கு மருமகளா என்ன, கூடிய சீக்கிரம் அவளுக்கும் என் பையனுக்கும் கல்யாணம் ஆகும்”
”ஆகாது”
”அபசகுணமா பேசாதீங்க”