வீரசிங்கமும் மங்களமும் முகம் மலர்ந்தார்கள் மஹதி கூட தன் தந்தையின் பக்கத்தில் வந்து நின்று
”அப்பா தேங்ஸ்பா என் மனசை நீங்க புரிஞ்சிக்கிட்டதுக்கு” என சொல்ல அவரோ தன் மகளை வேங்கையன் பக்கத்தில் நிற்க வைத்து ஜோடி பொருத்தம் பார்த்து மகிழ்ந்தார்
”நீ இருக்க வேண்டிய இடம் இதுதான், உங்க ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு” என சொல்ல அவள் மகிழ வேங்கையன் சட்டென விலகி நின்றான்.
மங்களம் உடனே மகேந்திரனிடம்
”அண்ணா உள்ள வாங்கண்ணா, எதுக்கு வெளியவே நின்னுக்கிட்டு, ரொம்ப நேரம் கார்லயே பயணப்பட்டு களைப்பா இருப்பீங்க, வாங்க வந்து ஓய்வெடுங்க, அதுக்குள்ள கோழி ஆடுன்னு கறிகுழம்பு செய்து விருந்து வைக்கிறேன் வாங்கண்ணா” என அன்புடன் அழைக்க மகேந்திரனும் சொந்த அண்ணன் போல மாறிவிட்டார்
”ஓ அப்படியா தங்கச்சி, சந்தோஷம் கல்யாண விருந்து சாப்பிட இன்னும் நிறைய நாள் இருக்கு, நாம பேசி முடிச்சிட்டோம், இருந்தாலும் கல்யாணம் ஆகறவரைக்கும் கை நனைக்க கூடாதேன்னு பார்க்கிறேன்”
”அதெல்லாம் ஊருக்குதான் நாம என்ன சொந்தக்காரங்கதானே, வாங்க அண்ணா உள்ள வாங்க” என சொல்லியவர் சாந்தியிடம் சென்று உரிமையாக அவரின் கையை பற்றிக்கொண்டு
”அண்ணி வாங்கண்ணி, இது நம்ம வீடு இங்க உங்களுக்கு உரிமை இருக்கு வாங்கண்ணி” என சொல்லி அழைக்க அவரும் முகம் மலர்ந்தபடியே சரியென தலையாட்ட அதில் மங்களமோ தன் கணவரிடம்
”ஏங்க என்னங்க வேடிக்கைப் பார்க்கீங்க, சம்பந்திக்காரங்க வந்திருக்காங்க ஆடு கோழி எல்லாம் பிடிச்சிட்டு வாங்க, விருந்து வைக்கனும்ல” என சொல்ல அவர் உடனே களத்தில்