என் பங்கு சொத்து மட்டுமில்லை எங்களோட மொத்த சொத்தையும் உனக்கே தர சொல்றேன் போதுமா”
”இதுக்கு உங்கப்பா ஒத்துக்க மாட்டாரு”
”அவரு என் விருப்பத்துக்கு சரிம்பாரு, சொத்தென்னடா சொத்து, நான்தான் அவங்களோட உண்மையான சொத்தே” என சொல்ல மூர்த்தி யோசித்தான்
”ஜானகி எப்படியிருந்தாலும் என்னை விடமாட்டா, இவளை வைச்சிக்கிட்டு இருந்தா யாரும் நமக்கு பொண்ணு தரமாட்டாங்க, இப்பவே ஊருக்குள்ள நம்ம பேர் கெட்டுப்போச்சி, இவளோட சொத்து கிடைக்காட்டி என்ன அதான் வேங்கையன் தன்னோட சொத்தை தரேன்னு சொல்றானே, பேசாம சொத்துக்காக இவளை கட்டிக்கலாம், இவள்தான் வான்னா வருவா போன்னா போவா, காலம் முழுக்க அடிமையா கிடப்பா இதுவும் நல்லாதான் இருக்கு சரின்னு சொல்லிடலாம்” என நினைத்தபடியே வேங்கையனைப் பார்த்து புன்னகையுடன்
”ஓ தாராளமா எப்ப கல்யாணத்தை வைச்சிக்கலாம்” என கேட்க அதற்கு வேங்கையன் முகம் மலர்ந்தான், ஆனால் ஜானகியின் முகம் சூம்பிவிட்டது
”வர்ற முகூர்தத்ததிலயே கல்யாணம்”
”முதல்ல சொத்து என் பேர்ல வரட்டும் அப்புறம்தான் கல்யாணம்”
”அதுக்கென்ன கல்யாணத்தன்னிக்கு சொத்து பத்திரம் உன் கைக்கு வந்து சேரும் போதுமா”
”போதும் போதும்”
”இப்ப இவளை உன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறியா”
”ஓ தாராளமா”
”இதப்பாரு சொத்துக்காக இவளை நீ கட்டிக்கிட்டாலும் இவளோட பாசத்தை நீ மதிக்கனும்,