(Reading time: 21 - 41 minutes)
Chinna marumagal
Chinna marumagal

ஆனா நீ என்ன செய்த நான்தான் வேணும்னு வந்த,  அதான் இப்ப நான் வந்துட்டல்ல பின்ன எதுக்காக பத்தினி மாதிரி பேசற, இப்ப என்ன உன் காதலை நான் புரிஞ்சிக்கனுமா, ஆமா முதல்ல உனக்கு வந்தது காதல்தானா தெரியுமா உனக்கு, அதுக்கு பேரு ஈர்ப்பு அவ்ளோதான்

  

அதை போய் காதல்ன்னு நினைச்சிக்கிட்டு பேசற, இதப்பாரு என்னோட தகுதிக்கு உன்னை விட அழகான உசந்த பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க, எந்நேரம் உன்னால எல்லா வரனும் தட்டிப்போச்சி, கடைசியில மஹதியும் என்னை விட்டுப் போயிட்டா, இனி யாரும் எனக்கு பொண்ணு தரமாட்டாங்க, உன்னால எனக்கு ஏகப்பட்ட நஷ்டம் அந்த நஷ்டத்துக்கு யாரு ஈடு செய்வா, அதுக்குதான் சொத்து கேட்டேன் இதுல என்ன தப்பிருக்கு எல்லாம் நாம சந்தோஷமா வாழறதுக்குதானே அப்புறம் என்ன”

  

”சீ நீயெல்லாம் ஒரு மனுஷனா, மனசாட்சியில்லாம பேசி வைக்கற 3 வேளை கஞ்சி ஊத்தினா கூட சந்தோஷமா உன்கூட வாழ ஆசைப்பட்டவ நான், ஆடம்பரமான வாழ்க்கைக்கு நான் ஒரு நாளும் ஆசைப்பட்டதில்லை“

  

”ஆனா நான் ஆசைப்பட்டிருக்கேன், ஆடம்பரமா வாழனும், ஊர் மெச்ச வாழனும், இதோ நிக்கறானே இந்த வேங்கையன் போல வாழனும், எல்லாரும் என்னை புகழனும்னு ஆசைப்பட்டேன் ஆனா நடக்கலை, இப்ப உன்னை நான் கல்யாணம் செய்துக்கிட்டா உன் மூலமா வர்ற சொத்தே போதும் ஊரே என்னை மதிக்கும்”

  

”அடச்சீ இதுக்கு மேலயும் உன்னை நான் கல்யாணம் செய்துக்குவேன்னு நினைச்சியா”

  

”பின்ன என்ன செய்யப் போற”

  

”இதப்பாரு உன்னோட இந்த கேவலமான புத்திக்கு நான் பலியாக மாட்டேன் உன்னை நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்”

  

”என்னை விட்டா உனக்கு ஏது கதி உன் வீட்ல கூட உன்னை ஏத்துக்க மாட்டாங்க”

  

”என் புருஷன் என்னை ஏத்துக்குவாரு” என சொல்ல அதைக்கேட்டு மூர்த்தியும் வேங்கையனும்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.