திடுக்கிட்டார்கள். அவளின் பேச்சு வீட்டிற்குள்ளேயும் கேட்டது. உள்ளே இருந்தவர்கள் கூட அதிர்ந்தார்கள்
”புருஷனா யாரை சொல்ற அதான் தாலியை தூக்கி எறிஞ்சிட்டு வந்துட்டியே அப்புறம் என்ன“
”உன்னை விட வேங்கையன் எவ்வளவோ மேல், நான் அவருக்கு செஞ்ச அநியாயத்துக்கு எனக்கு அவர் உதவி செய்யதான் நினைச்சாரு நான் சந்தோஷமா இருக்கனும்னு அவரோட சந்தோஷத்தை விட்டுக் கொடுத்தாரு, நான் அவரை விட்டு போனாகூட தனியா வாழ்ந்துக்குவேன்னு சொன்னாரு, வேற ஒரு கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னாரு, இவ்ளோ தங்கமான மனம் படைச்சவரு மறுபடியும் என் கழுத்தில தாலி கட்டுவாரு” என சொல்ல அதைக்கேட்டு ஆடிப்போனான் வேங்கையன்
முதல் முறை அவனுக்குள் பல மாற்றம் ஏற்பட்டது, ஜானகி வேண்டாம் என நினைத்தான், மூர்த்திக்கு திக்கென்றது, ஜானகியின் பேச்சால் சொத்து பறிபோனதே என எண்ணி வருந்தினான், ஜானகியோ மூர்த்தியை விடுத்து வேங்கையன் பக்கம் வந்து நின்றுக் கொள்ள வேங்கையன் ஜானகியை பார்த்து பயந்தான்.
மூர்த்திக்கு பெருத்த அவமானம் இனி இங்கு நிற்பது வீண் என நினைத்து அங்கிருந்து கிளம்பிச் சென்றான், ஜானகியோ வேங்கையனின் கையை முதல் முறை பற்றினாள், அதுகூட அவனுக்கு தீ போல சுட்டது, சட்டென அவளை விட்டு விலகி நின்றான்
”மாமா” என அவள் அன்பாக அழைக்க அவனுக்கு தூக்கிவாரிப்போட்டது
”என்னை மன்னிச்சிடுங்க மாமா, நான் செஞ்சது எல்லாமே தப்புதான், நான் என் தப்பை உணர்ந்துட்டேன், என்னை மன்னிச்சி ஏத்துக்குங்க மாமா” என சட்டென அவனின் காலில் விழுந்தாள்.
அதற்கு மேல் அவளை என்ன செய்வதென தெரியவில்லை. அவளை எழுப்பி நிற்கவைத்தவன்
”அவசரப்படாத ஜானகி மூர்த்தி சொன்னதைக்கேட்டு தப்பான முடிவு எடுக்காத உன்னால என்கூட வாழமுடியாது, நீ மூர்த்தியோடதான் வாழனும் அதுதான் சரி”