”நான் சொல்லலைம்மா உங்க புள்ளைதான் இப்ப சொன்னாப்லயே, கேட்கலை உங்களுக்கு”
”அவன் பேச்செல்லாம் ஒரு பேச்சா அவன் நினைப்பு என்னன்னு எனக்குத் தெரியாதா, உங்க பொண்ணை நீங்க கூட்டிட்டுப் போகனும்னு நினைச்சி அப்படி பேசி வைக்கறான்”
”இதப்பாருங்க நீங்களா எதையாவது சொல்லாதீங்க, உங்களுக்கென்ன பையனை பெத்தவங்க ஆனா நான் பொண்ணை பெத்திருக்கேன், எங்களுக்குதானே மானக்கேடு” என சொல்ல மங்களம் தன் கணவரை நாடினார்
”ஏங்க என்னங்க அமைதியா நிக்கறீங்க, நீங்கதானே இவங்களை பார்த்துட்டு பேசிட்டு வரேன்னு சொன்னீங்க, கையோட இவங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்க, ஆனா இவங்க என்னென்னவோ பேசறாங்க, இப்ப என்னங்க செய்றது“
”அவங்க சொல்றது வாஸ்தவம்தானே, உன் புள்ளை வீம்புல இருக்கான், இப்ப கூட ஜானகி என் மனைவிங்கறான், அது உனக்கு தப்பா தெரியலையா, அவனைப் போய் கேட்கறதை விட்டுட்டு எதுக்கு என்கிட்ட வந்து நிக்கற போ போய் அவனை கேளு“ என சொல்ல மங்களம் தன் மகனிடம் வந்தார்
”வேங்கை என்ன ஆச்சி உனக்கு, எதுக்கு இப்படி நடந்துக்கற மனசாட்சி படி வாழறவன் நீ, ஆனா இப்ப நீ நடந்துக்கிட்ட முறை தப்புன்னு உனக்கு தெரியலை, உன் மனசாட்சி உன்னை உறுத்தலை”
”அம்மா நான் செய்றது எல்லாமே நல்லதுக்குதான், வந்தவங்க அவங்க பொண்ணை கூட்டிட்டுப் போகட்டும் நீ அமைதியா இரும்மா“
”அவளை அனுப்பிட்டு நீ என்ன செய்யப் போற, தனியாவே வாழ்ந்துடுவியோ நம்ம வீட்டுக்கு வாரிசு வேணாமா“
”வேணும்னா குழந்தையை தத்து எடுக்கறேன்மா“