(Reading time: 21 - 42 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

விரைந்தார்.

  

கண்ணகியை எப்படி எதிர்கொள்வது என்ற பயத்தில் மாதவியிருக்க தாத்தாவின் இறப்பை நினைத்து கோவலன் கண்கள் கலங்கினான்.

  

வீடு வந்ததும் காரை விட்டு இறங்கினார்கள் அனைவரும், கோவலன் அப்போதும் கூட மாதவியின் கரம் பற்றியபடியே சென்றான், மாதவிக்கோ தர்மசங்கடமாகிப் போனது, இதை மட்டும் கண்ணகி பார்த்தால் என்ன நினைப்பாள் என நினைத்து வருந்தினாள், வீட்டின் முன் இருந்த போர்டிகோவில் ஈஸ்வரமூர்த்தியின் உடல் ஐஸ் பாக்ஸில் கிடத்தப்பட்டிருந்தது, அவரை காண பலரும் வந்திருந்தார்கள், அதில் சிலம்பரசனும் இருந்தான், ஒன்றாக வந்த கோவலனையும் மாதவியையும் கண்டு சிரித்தான், நேராக கண்ணகியிடம் சென்றான்.

  

கண்ணகியோ ஈஸ்வரமூர்த்தியின் உடல் இருந்த பாக்ஸ் பக்கமே அமர்ந்திருந்தாள். நேராக அவளிடம் சென்றவன் மெதுவாக சொன்னான்

  

”கண்ணகி அங்க பாரு உன்னோட புருஷன் கோவலனும் உன்னோட உயிர்தோழி மாதவியும் ஒண்ணா கைகோர்த்துக்கிட்டு வராங்க பாரு” என சொல்ல அதைக்கேட்டு அதிர்ந்து சட்டென நிமிர்ந்துப் பார்த்தாள்.

  

கோவலன் மாதவியுடன் வருவதைக்கண்டாள், உன்னிப்பாக கவனித்தாள். அதில் கோவலன் துக்கத்துடன் இருக்க மாதவியோ பயத்துடன் இருந்தாள், கோவலனின் பார்வை தாத்தாவின் மீது இருக்க மாதவியின் பார்வை கண்ணகியிடம் இருந்தது, கண்ணகி தன்னை பார்க்கிறாள் என்றதும் மாதவி உடனே கண்களால் பேசினாள்

  

”கண்ணகி என்னை நம்பு” என்பது போல, அதை உடனே புரிந்துக் கொண்ட கண்ணகி மற்றவர்கள் யாரும் இக்காட்சியை தவறாக எண்ணி பேசுவதற்குள் உடனே மாதவியிடம் வந்தாள்.

  

கண்ணகி வரவும் கோவலன் விலக பார்க்க அவன் இழுத்த இழுப்பிற்கு மாதவி செல்வதைக்கண்டு திகைத்தாள், மாதவியாக செல்லவில்லை அவன் இழுக்கிறான் அவளோ தவிக்கிறாள் என நினைத்து உடனே மாதவியின் இன்னொரு கரத்தை பற்றி நிப்பாட்டினாள்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.