அசையவிடாம செய்தாரு, அவரை விரட்ட நான் படாதபாடுபட்டேன் என்னால முடியலை கண்ணகி”
”உண்மையை சொல்லு மாதவி நீ அவரை காதலிக்கிறியா மறைக்காம சொல்லு”
”கண்ணகி” என அலறினாள்
”எதுவாயிருந்தாலும் சொல்லு மாதவி, நான் உன்னை நம்பறேன் அதே சமயம் அவர் உன்கிட்ட உரிமையா நடந்துக்கறார்னா கண்டிபபா நீயும் உனக்கே தெரியாம இடம் கொடுத்திருக்கலாம், அவர் உனக்கு புடவை எடுத்து தந்தப்பவே நான் சந்தேகப்பட்டேன், ஆனா நீ அதை இதை சொல்லி சமாளிச்ச, இந்த முறையும் நீ சமாளிக்க முயற்சி செய்யாம உள்ளது உள்ளபடி சொல்லு நீயும் அவரை விரும்பறியா” என கேட்க அவளோ
”நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை இருக்கற உண்மையை சொல்றேன் ஆமாம் கண்ணகி நானும் அவரை விரும்பினேன், ஆனா அது உன் கல்யாணத்துக்கு முன்னாடிதான் என்னோட விருப்பத்தை நான் அவர்கிட்ட சொல்லலை, அதுக்குள்ள அவரே உன்கிட்ட வந்து கல்யாணத்தை பத்தி பேசினதை நான் நேராவே பார்த்தேன், அதோட நான் அவரோட வாழ்க்கையில இருந்து விலகிட்டேன் கண்ணகி, இப்ப அவரை நான் விரும்பலை உன்னோட கணவராதான் நான் பார்க்கிறேன், என்னை நம்பு கண்ணகி”
”நம்பறேன்” என்றாள் கண்ணகி அதில் மாதவி நிம்மதியானாள்
”நீ இங்கயே இரு நான் வந்துடறேன்“
”இல்லை கண்ணகி நான் போறேன்”
”நீ போனா உன் பின்னாடி அவரும் வந்துடுவாரு இங்க அவர் செய்ய வேண்டிய காரியம் நிறைய இருக்கு புரிஞ்சிக்க”
”சரி உனக்காக நான் இருக்கேன்” என சொல்ல கண்ணகியும் அவளை அங்கேயே விட்டுவிட்டு அறைக்கதவை சாத்திவிட்டு வெளியே வர சிலம்பு அவளை நிப்பாட்டினான்