”பரவாயில்லையே பிரச்சனையை பூசி மறைச்சிட்ட போல”
”அதிகமா பேசாத, என்னதான் நீ கல்லூரிக்கு பிரின்சிபாலா இருந்தாலும் இப்ப நான்தான் அந்த கல்லூரிக்கு தாளாளர் அது ஞாபகமிருக்கட்டும்”
”என்னது”
”ஆமாம் அப்படித்தான் உயில் எழுதியிருக்காரு தாத்தா, அதனால தேவையில்லாம என்கிட்ட பேசற வேலையை வைச்சிக்காத”
”ஓஹோ அப்படியா உன் கீழே வேலை செய்ய பிடிக்காமதான் உன்னை ஒழிக்க அவ்வளவு திட்டம் போட்டேன், இப்ப மறுபடியும் உனக்கு கீழேதான் நான் வேலை செய்யனுமா அதையும் பார்க்கிறேன், கோவலன் மாதவியோட காதல் விசயத்தை ஊரெல்லாம் பரப்பறேன், எல்லாரும் உன்னையும் கோவலனையும் மாதவியையும் கேவலமா பேசட்டும்“
”நிறுத்து உனக்கு என்ன வேணும்”
”அடடா நீயிருக்கியே மகா புத்திசாலி, என்னை புரிஞ்சிக்கிட்டவ, நீதான் இப்போதைக்கு எனக்கு தேவை மரியாதை, ஒரு பொம்பளை கீழே வேலை செய்றதை நான் அவமானமா கருதறேன், இருந்தாலும் உயில்ங்கற அது உண்மையா கூட இருக்கலாம், ஏன்னா பெரியவரு தன் பேரனை விட உன்னைத்தானே நம்பினாரு, அதனால அவர் அப்படி உயில் எழுத வாய்ப்பிருக்கு, சட்டப்படி நீயே தாளாளரா இருந்துக்க, ஆனா என் விசயத்தில நீ குறுக்க வரக்கூடாது சரியா” என சொல்ல அவளோ அச்சமயம் சரியென தலையாட்ட அதோடு அவன் அங்கிருந்து சென்றே விட்டான்.
அவன் சென்றதை ஊர்ஜிதம் செய்தபடி வந்தவளை பிடித்தான் கோவலன்
”என் மாதவி எங்க” என கேட்க அவளோ