(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”உசுரு கொடுத்த நீங்களே அவளோட உசுரை எடுக்கலாமா வேணாம்யா, நாங்க ஊரை விட்டே போயிடறோம், இனி இந்த பக்கமே வரமாட்டோம் அவளை விட்டுடுங்கய்யா” என கெஞ்ச பொன்முடி அவர்களின் பேச்சில் அதிர்ந்து ஒதுங்கி தன் தந்தை சங்கமேஸ்வரனிடம் தஞ்சமடைய சங்கமேஸ்வரனோ நாச்சியாவின் தந்தையிடம்

  

”இந்த முறையாவது நீ சொன்னதை செய், மறுபடியும் உன்னையும் உன் குடும்பத்தையும் இந்த ஊருக்குள்ள நான் பார்க்க கூடாது” என அதட்ட அதில் அவர்கள் சரியென தலையாட்ட மேலவீதி ஆண்களோ அதிர்ந்தார்கள், நாச்சியாவை விட்டுக் கொடுக்க அவர்களால் இயலவில்லை உடனே தர்க்கம் புரிந்தார்கள். நாச்சியாவை ஊருக்கு நேர்ந்துவிட வேண்டும் என பலமாக பறைசாற்றினார்கள். இன்னொரு பக்கம் நாச்சியாவின் பெற்றோரோ ஊரை விட்டே போய்விடுகிறோம் என ஊர் மக்கள் முன் கைகூப்பி கெஞ்சினார்கள். இதில் நாச்சியாவோ

  

”ஊரை விட்டு அவப்பெயரோட போறதுக்கு நான் சாகறதே மேல், என்னை கொல்லுங்க” என பொன்முடியிடம் வந்து கைகூப்பி கெஞ்சினாள், அதே நேரம் பொன்முடியின் மனக்கண்ணில் ஒரு சின்ன வெளிச்சம் அதே நாச்சியாவை பிறந்த குழந்தையாக அன்று பார்த்த அந்த தருணம் வரவும் அவரையும் அறியாமல் கொல்ல கையெடுத்த அவரே அவளின் தலையை வருடிவிட்டார்.

  

அதைக்கண்ட சங்கமேஸ்வரன் அதிர்ந்து பொன்முடியை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். நாச்சியாவின் நிலைமை படுமோசமாக மாறுவதை தாங்க இயலாமல் போன அகத்தியன் பொறுத்தது போதும், ஊரையும் எதிர்க்க வேண்டும், நாச்சியாவையும் காப்பாற்ற வேண்டும், அவள் மேல் விழுந்த அவப்பெயரையும் துடைக்க வேண்டும் அதற்கு ஒரே வழிதான் உண்டு என நினைத்த மறுநொடி அக்கம் பக்கம் பார்த்தான், சில அடி தொலைவில் சாலை ஓரத்தில் சிறிய அம்மன் கோயில் இருப்பதும் அம்மனின் திரிசூலம் வெளியே நடப்பட்டிருப்பதும் அதில் நிறைய மஞ்சள்கிழங்கு கயிறில் சுற்றப்பட்டு அது அதில் கட்டப்பட்டு இருப்பதையும் கண்டு விறுவிறுவென அவ்விடம் சென்று திரிசூலத்தில் சுற்றப்பட்டிருந்ததில் இருந்து ஒரு மஞ்சள்கயிறை எடுத்துக் கொண்டு வந்தவன் ஊரறிய தனது தாத்தா தந்தை பார்க்கும் படி நாச்சியாவின் முன் வந்து நின்று

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.