(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”தாத்தா என்ன தாத்தா அமைதியா இருக்கீங்க, ஏதாவது செய்ங்க தாத்தா, நாச்சியா மேல எந்த தப்பும் இல்லை தாத்தா, அவளை ஊருக்கு நேர்ந்துவிடாதீங்க அது பாவம்” என சொல்ல சங்கமேஸ்வரனுக்கு குழப்பமாக இருந்தது, ஊரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது அதே சமயம் நாச்சியாவையும் காப்பாற்ற வேண்டும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்த நொடி பொன்முடி வந்தார்

  

”அகத்தியா நீ செய்த தப்பை நீதான் சரியாக்கனும் வீணா உன்னால ஒரு பொண்ணோட வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்குது, அவளை ஊருக்கு நேர்ந்து விடறதுக்கு பதிலா நீயே அவள் கழுத்தை நெறிச்சி கொன்னுடலாம் இல்லையா நானே அந்த வேலையை செய்றேன் பாவம் அந்த பொண்ணாவது தப்பிக்கட்டும்” என சொல்லி நாச்சியாவின் கழுத்தை பற்ற வந்த பொன்முடியின் செயலைக்கண்ட அகத்தியனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

  

”அப்பா போதும்” என அவரை தடுத்தான். சங்கமேஸ்வரன் நடப்பதைக் கண்டு கொதித்தார்

  

”பொன்முடி என்ன காரியம் செய்ற, அப்படி செய்யாத”

  

”இல்லை இவளை உயிரோட விடக்கூடாது விட்டா அது பெரிய தப்பாயிடும், அகத்தியனுக்கு கெட்டப் பேர் வந்துடும், இவளை ஊருக்கு நேர்ந்துவிடறதை விட சாகடிக்கறதுதான் நல்லது” என பொன்முடி சொல்ல அது நாச்சியாவிற்கு பிடித்திருந்தது, அவள் மென்மையாக சிரித்து பொன்முடி முன் தானாக வந்து நின்று கைகூப்பி

  

”என் மானத்தை காப்பாத்த உசுரை விடக்கூட நான் தயார்” என சொல்லவும் பொன்முடியோ சிறிதும் தயங்காமல் அவளை கொல்ல துணிந்தார்.

  

தனது தந்தையா இப்படி, ஒரு ஈ எறும்புக்கு கூட பாதகம் நினையாதவரா நாச்சியாவை கொல்ல உறுதியாக உள்ளாரே இனி என்ன செய்வது என தெரியாமல் தன் தாத்தாவைப் பார்க்க அவரின் கண்களில் ஒரு வித சோகம், பேச திராணியற்று இருந்தார், பொன்முடியோ நாச்சியாவின் கழுத்தை பற்றி அழுத்த அவளோ வலியின் காரணமாக அம்மா அப்பா என முனக அதில் பொன்முடி அதிர்ந்து விலகி நின்றார் அவளோ

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.