(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

”சாகறப்ப என் அப்பா அம்மா ஞாபகம் வந்துடுச்சி அவ்ளோதான், நீங்க என்னை கொல்லுங்க நான் தயார்” என சொல்லி நிற்க இப்போது பொன்முடியின் கைகள் நடுங்கியது. அவரால் அவரது கையை அசைக்க இயலவில்லை.

  

அதற்குள் அங்கமுத்து வந்துவிட்டார்

  

”மச்சான் என்ன யோசனை இவளால அகத்தியனுக்கு வந்த களங்கத்தை போக்கியே ஆகனும் ஒன்னு அவள் தண்டனை அனுபவிக்கனும் இல்லை சாகனும் இல்லைன்னா ஊரை விட்டே ஓடவைக்கனும் எதையாவது செய்ங்க மச்சான், ஏன் இப்படி சிலை போல நிக்கறீங்க” என பொன்முடியை உலுக்க அகத்தியனோ அங்கமுத்துவை பிடித்தான்

  

”மாமா என்ன செய்றீங்க நாச்சியா பாவம், அவளுக்கு ஒன்னுமே தெரியாது அப்பாவி அவளை விட்டுடுங்க“

  

”அவளை விட்டா உனக்குதான் கெட்ட பெயர் நம்ம குடும்ப மானமே போயிடும்“

  

”உங்களுக்கும் நாச்சியா வயசுல பொண்ணு இருக்காள்ல, அப்படியிருந்தும் நீங்களே இப்படி நடந்துக்கலாமா அவளை விட்டுடலாம்” என சொல்ல அங்கமுத்து கேட்கவில்லை.

  

தான் செய்த பணமோசடியை அகத்தியனிடம் காட்டிக்கொடுத்தாளே என்ற கோபத்தில் அவளை பழிவாங்க பொன்முடியை உசுப்பினார்

  

”இன்னும் என்ன யோசனை அவளை கொல்லுங்க மச்சான்” என கத்த அதில் பொன்முடியும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நாச்சியாவை நெருங்க நாச்சியாவோ மரணத்தை வரவேற்க பயமின்றி அழுகையின்றி சிரித்த முகத்துடன் தெளிவாக நின்றாள். அவ்வாறு தெளிவாக இருக்கும் அவளை எப்படி கொல்வது என நினைத்து திகைத்து நின்றார் பொன்முடி.

  

அதே நேரம் நாச்சியாவின் தாய் தந்தை ஊருக்குள் வந்திருந்தனர், பாதி வழியில் நாச்சியாக்கு நடக்கும் அநீதியை கேள்விப்பட்டு ஓடி வந்து பார்த்தவர்கள் சட்டென பொன்முடியின் பாதத்தில் விழுந்தார்கள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.