(Reading time: 23 - 46 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

  

”உன்னை காப்பாத்த இதை விட வேற வழி எனக்குத் தெரியலை நாச்சியா, என்னால உனக்கு உண்டான அவப்பெயரை நானே துடைக்கறேன் என்னை மன்னிச்சிடு” என சொல்ல அவளோ குழம்பி அவன் என்ன செய்யப் போகிறான் என யோசிப்பதற்குள் தான் கொண்டு வந்திருந்த மஞ்சள்கயிறை அவளின் கழுத்தில் கட்டினான். அதை அவளே எதிர்பார்க்கவில்லை, தாலி கட்டி முடித்த கையோடு அவளின் கையை தன் கையோடு கோர்த்தியபடியே ஊர் முன் உரத்த குரல் எடுத்து பேசினான் அகத்தியன்

  

”நான் நாச்சியாவை கல்யாணம் செய்துக்கிட்டேன், இப்ப இவள் என் மனைவி திருமதி அகத்தியன், இனி இவள் பக்கம் கூட யாரும் வரக்கூடாது” என அதட்ட ஊரே அடங்கிவிட்டது. பொன்முடியும் சங்கமேஸ்வரனும் கூட சர்வமும் அடங்கி நின்றார்கள். நாச்சியாவின் பெற்றோருக்கு இது பேரிடியாக இருக்கும் என நினைத்தால் அவர்களோ வெகு இயல்பாக இருந்தார்கள், அகத்தியனோ யாரையும் பாராமல் நாச்சியாவின் கையை பற்றி உடன் அழைத்துக் கொண்டு நேராக காரிடம் சென்று அவளை காருக்குள் ஏற்றிக் கொண்டு தானும் ஏறி காரை ஓட்டிக் கொண்டு நேராக தன் வீடு நோக்கி சென்றான். சில நொடிகளில் நடந்து முடிந்த விசயங்களால் ஊரே கதிகலங்கிவிட்டது, மேலவீதி ஆண்களுக்கு தங்கள் திட்டம் படு தோல்வியானதை நினைத்து இனி நாச்சியாவை நினைப்பது வீண் என ஒரு மனதால் முடிவெடுத்து அதோடு அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

  

ஊர் மக்களும் சலசலவென பேசிக் கொண்டே தம்தம் வீடுகளுக்குச் செல்ல இறுதியில் சங்கமேஸ்வரன், பொன்முடி, நாச்சியாவின் பெற்றோர் மாத்திரமே நின்றார்கள் நடுவீதியில்

  

அதிலும் கீழவீதி செல்லும் பாதையின் ஆரம்பத்தில் சங்கமேஸ்வரனும் பொன்முடியும் நின்றார்கள், மேலவீதி செல்லும் பாதையின் ஆரம்பத்தில் நாச்சியாவின் பெற்றோர்கள் நின்றார்கள். இப்போது யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என யாராலும் சொல்லிவிட இயலாது.

  

பொன்முடிக்கு மட்டும் அந்த வார்த்தைகள் செவியில் ஒலித்தபடி இருந்தது

  

”எப்படி பார்த்தாலும் உங்களுக்கு பிறந்த குழந்தை கண்டிப்பா உங்க பேச்சை கேட்காது, தன்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.