அவனை, நீ இங்கயே தங்கு நாளைக்கு கல்லூரிக்குப் போகலாம்”
”அப்ப நீங்க எங்க தங்குவீங்க”
”ஏன் கேட்கற”
”நீங்க இங்க தங்காதப்ப எனக்கு இங்க என்ன வேலை, நான் என் வீட்டுக்குப் போறேன்“
”எதுக்கு மறுபடியும் பால் காய்ச்சறேன்னு மயங்கி விழறதுக்கா, நல்ல நேரத்தில உன்னை வந்து நான் பார்த்தேன், இல்லை சிலிண்டர் வெடிச்சிருக்கும், நான் எங்கயும் போகலை இங்கதான் இருக்கேன் போதுமா” என சொல்ல அவள் முகம் மலர்ந்தாள்
”அவசரப்படாத நான் இங்க தங்கறது உன்கூட வாழறதுக்காக இல்லை” என சொல்ல அவளின் முகம் சூம்பிப் போனது
”புருஷன் பொண்டாட்டிங்கற உறவுக்கு அப்பார்ப்பட்ட உறவு ஒண்ணு இருக்கு அது என்ன தெரியுமா”
”என்ன”
”நட்பு, உன்னை என்னால மனைவியா பார்க்க முடியாது வேணும்னா தோழியா பார்க்கிறேன் உனக்கு துணையா இருக்கேன் என்ன சொல்ற” என கேட்க அவளோ சலிப்பாக சிரித்தாள்
”இப்ப இருந்து நாம நண்பர்கள் ஓகே” என சொல்ல அவளோ சிரிப்புடன் தலையை மெதுவாக ஆட்டினாள்
”நல்லது இப்ப சாப்பிட்டு உனக்குன்னு இருக்கற ரூம்ல நீ போய் தூங்கு, நான் என் தாத்தா ரூம்ல படுத்துக்கறேன், காலையில காலேஜ்க்கு போகனும், நினைவிருக்கட்டும் இப்ப இருக்கற நோயாளி கண்ணகியாட்டம் வந்து நின்னுடாத முன்ன நான் பார்த்த தைரியசாலியான கண்ணகியா வரனும் புரியுதா” என சொல்ல அவளோ மெதுவாக சரியென தலையாட்டினாள்.