(Reading time: 25 - 49 minutes)
Poova? thalaiya?
Poova? thalaiya?

அடுத்து அவர்கள் இருவரும் அறைக்குச் செல்ல அவர்களுக்கான உணவு தேடி வந்தது, அதை இருவரும் உண்டார்கள். அது நாள் வரை ஏனோதானோவென வாழ்ந்தவர்கள் இப்போது கல்லூரி என்ற ஒரு விசயத்தில் ஒற்றுமையாகிப்போனார்கள்.

  

மறுநாள் காலையில் கண்ணகி பழைய கண்ணகி போல ரெடியாகி வந்தாள், அவனும் தாளாளர் போல ரெடியாகி வந்தான், கண்ணகி வரும் தோரணையைக்கண்டதும் மனம் தடுமாறினான் கோவலன்

  

”நீயா இது” என கேட்க அவளோ மென்மையாக சிரித்து

  

”கல்லூரிக்கு போகனும் நேரமாச்சி” என்றாள்

  

”போகலாம் சாப்பிட்டு போகலாம்” என சொல்லி அவளுடன் ஒன்றாக அமர்ந்து டிபன்  சாப்பிட்டு முடித்து அவளை அழைத்துக் கொண்டு நேராக கல்லூரிக்குச் சென்றான்.

  

வழக்கம் போல சில மாணவர்கள் வண்டிகளை நிப்பாட்டி கலாட்டா செய்வது போல இந்த வண்டியையும் நிப்பாட்ட கண்ணகியும் கோவலனும் கெத்தாக வண்டியை விட்டு இறங்கி கலாட்டா செய்ய வந்த மாணவர்களை உன்னிப்பாக பார்த்தார்கள், அவ்வளவுதான் மாணவர்கள் வாலை சுருட்டிக் கொண்டு கல்லூரிக்குள் ஓடினார்கள், கண்ணகியும் கோவலனும் சேர்ந்தாற் போல நடந்தே கல்லூரிக்குள் நுழைந்தார்கள், அவர்கள் வர வர அங்கிருந்த மாணவர்கள் அவர்களுக்கு வணக்கம் வைத்தார்கள், கோவலனோ கைகடிகாரத்தைப் பார்த்தான். 9.10 என இருக்க உடனே

  

”ப்யூன் யோவ் எங்கய்யா இருக்க” என உரக்க அழைக்க ப்யூன் அடித்து பிடித்து ஓடிவந்து இவ்விருவருக்கும் சல்யூட் வைக்க கண்ணகியோ

  

”ஏன் பெல் அடிக்காம இருக்கீங்க”

  

”மேடம் அது பிரின்சிபால் இன்னும் வரலை, அவர் வந்தபின்னாடிதான் பெல் அடிக்கனும்னு சொன்னாரு அதான்” என சொல்ல கோவலனோ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.