”பிரின்சிபால்தான் ஏற்கனவே வந்தாச்சே உன் முன்னாடி நிக்கறேனே கண்ணு தெரியலை” என சொல்ல ப்யூன் முகம் மலர்ந்தான்
”சார் நீங்கதான் பிரின்சிபாலா வந்திருக்கீங்களா, நல்லது சார் வாங்க சார் வாங்க” என அழைக்க அவனோ
”அப்போ தாளாளர் மேடத்தை கூப்பிட மாட்டியா” என சொல்ல ப்யூன் இன்னும் குதூகலமாகி கண்ணகியைப் பார்த்து
”மேடம் நீங்க வந்ததே பெரிய விசயம், வாங்கம்மா வந்து உங்க இடத்தில உட்காருங்கம்மா, அந்த தாளாளர் சேருக்கு பொருத்தமானவங்க நீங்க ஒருத்தர்தான்மா வாங்க வாங்க” என அழைக்க கோவலனோ
”நாங்களே எங்க இடத்துக்கு போயிடறோம் முதல்ல போய் பெல் அடி” என சொல்ல ப்யூனும் ஓடினான்.
அவர்கள் இருவரும் தங்களது அறைக்குச் சென்று அமர பெல் அடிக்க சரியாக இருந்தது, பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் மாணவர்கள் வகுப்புக்குச் சென்றார்கள், ஆசிரியர்களோ வியந்தார்கள் என்னவென விசாரிக்க ப்யூனிடம் வர அவனோ கோவலன் பிரின்சிபாலாகவும் கண்ணகி தாளாளராகவும் வந்திருப்பதைச் சொல்லவும் அவர்கள் அரண்டு அவரவர்களின் வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுக்கலானார்கள், ஒரு நொடியில் கல்லூரியே தலைகீழாக மாறிவிட்டது, என்னதான் கண்ணகி இல்லாமல் போனாலும் அவளைக்கண்டதும் பழைய ஒழுக்கம் கல்லூரிக்கு வந்தது.
வழக்கம் போல தாமதாக வந்தான் சிலம்பு மாணவர்கள் ஒழுங்கீனமாக இல்லாமல் வகுப்பில் இருப்பதும் ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும் கண்டு வியந்தான்
”ப்யூன் ப்யூன் யோவ் எங்கய்யா இருக்க” என அழைக்க ப்யூன் வந்தான் கெத்தாக