”அறிவிருக்கா உனக்கு நீ யாரு கண்ணகி நீ எப்படியிருக்கனும், டாப்ல இருக்கனும் ஆனா இப்ப பாரு நீ எப்படியிருக்கன்னு” என சொல்ல அவளோ மென்மையாக சிரித்து
”நீங்க எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா”
“எனக்கென்ன குறைச்சல் மாதவியில்லைங்கறதை தவிர” என சொல்ல அவளின் சிரிப்பு தொலைந்துவிட்டது.
”நீ 3 நாளா சாப்பிடலைன்னு டாக்டர் சொல்றாரு ஏன் என்னாச்சி”
”நான் சாப்பிட்டு இப்ப என்ன ஆகப்போகுது”
”இப்படி சாப்பிடாம இருந்தா தாத்தாவுக்கு துணையா போய் சேர வேண்டியதுதான்”
”அந்த நாளைதான் நான் எதிர்பார்த்து காத்திருக்கேன்”
”ஏய் என்ன பேசற நீ, அப்படி என்ன நடந்துப் போச்சி உனக்கு“
”இன்னும் என்ன நடக்கனும், அதான் எல்லாமே என்னை விட்டு போயிடுச்சே”
”இந்த கல்யாணம்ங்கற பந்தத்தை நீ பெரிசா எடுத்துக்கற, அதை சாதாரணமா நினைச்சிக்க சரியாயிடும், இப்ப நான் இல்லையா அது போல”
”என்னால உங்களை போல இருக்க முடியாது ஏன்னா”
”ஏன்னா”
”நான் உங்களை விரும்பறேன் ஐ லவ் யூ” என்றாள்
அவ்வளவுதான் கோவலனால் அவ்விடம் இருக்கவே பிடிக்கவில்லை, சட்டென வெளியேறி