சென்று வேக வேகமாக நடந்து தனது காரில் ஏறி அமர்ந்து காரை ஓட்டிக் கொண்டு சென்றான், எங்கு செல்கிறோம் என தெரியாமல் அவன் பாட்டுக்கு மனம் போன போக்கில் சென்றான்
”என்ன பேசறா அவள் என்னை விரும்பறாளாம், ஐ லவ் யூன்னு சொல்றா, இது எப்படி சாத்தியம், நான் இதை நம்ப மாட்டேன்” என புலம்பிக் கொண்டே காரை செலுத்தினான்.
ஊரை விட்டே அவுட்டர் வந்த நேரம் அவனுக்கு போன் வந்தது யார் என்னவென பார்த்தான், மருத்துவமனையில் இருந்து போன் வரவும் தன்னையே நொந்துக் கொண்டு காரை திருப்பி மருத்துவமனைக்கு விரட்டினான்.
அங்கு சென்றதும் மருத்துவரே அவனை திட்டினார், அவ்வளவையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு கண்ணகியை டிஸ்சார்ஜ் செய்து அவளை தன் காரில் ஏற்றிக் கொண்டு சென்றான், அவளோ சோர்வாக இருந்தாள் சீட்டில் சாய்ந்தபடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். காரோ கல்லூரியை கடந்துதான் செல்ல வேண்டும், அந்த கல்லூரியிடம் வரும் போது கண்ணகி உடனே
”காரை நிப்பாட்டுங்க” என்றாள் ஈனக்குரலில் அவனும் உடனே காரை ஓரமாக நிறுத்தினான்.
காருக்குள் இருந்தபடியே கண்ணகி அந்த கல்லூரியை பார்த்தாள், கோவலனும் பார்த்தான், அவன் இருந்தப்போது விட இப்போது மிக மோசமான நிலைமையில் இருந்தது, கல்லூரி மாணவர்கள் ரோட்டிலேயே விளையாடிக் கொண்டும், வரும் போகும் வண்டிகளை மடக்கி கலாட்டா செய்வதுமாக இருந்தார்கள், ஆசிரியர்கள் யாரும் கண்டுக் கொள்ளவில்லை, அந்த நிலைமையில் இருந்த கல்லூரியைக்கண்டதும் கண்ணகி கதறி கதறி அழுதாள்.
அவளின் அழுகையைக்கண்டு கோவலன் பயந்தான், எப்படியிருந்தவள் தைரியசாலி, புத்திசாலி, இப்போது அழுவதைக்கண்டு அவனுக்கே மனம் ஒப்பவில்லை, சட்டென வண்டியை எடுத்து ஓட்டினான், அவள் அழுதுக் கொண்டேயிருக்க அவனோ அவளை அழைத்துக் கொண்டு எங்கு செல்வதென தெரியாமல் நொந்துப் போய் இறுதியில் அவனது தாத்தா வீட்டிற்கே சென்றான்.
வீடு வரவும் கண்ணகியை பார்த்தான், அவள் இன்னும் அழுதபடி இருக்க அவனுக்கு கஷ்டமாக