இருந்தது, அதற்காக அப்படியே விட்டால் சரியாக வராது என நினைத்தவன்
”ஏய் என்ன அழுகை, வீடு வந்துடுச்சி இறங்கு” என அதட்ட அவளோ அழுகையை ஒரு நொடி நிப்பாட்டிவிட்டு அவனை குழப்பமாக பார்த்துவிட்டு எங்கு வந்திருக்கிறோம் என பார்த்து அதிர்ந்தாள்
”இது இங்க”
”இறங்குன்னு சொன்னேன் காதுல விழலை இறங்கு” என அதட்ட அவளோ பதட்டமாக இறங்கி நின்றாள் அவனும் காரை விட்டு இறங்கினான்
3 மாதம் கழித்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான், கண்ணகியோ தயங்கியபடியே சென்றாள், அவன் ஹாலில் அமர்ந்ததும் வேலைகாரர்கள் வரிசையாக வந்து நின்றார்கள், 3 மாதம் கழித்து வந்தவனைக்கண்டு வியந்து அவனுக்கு மரியாதை செலுத்த அவனோ
”சமையல் செய்ங்க சீக்கிரம், ப்ரூட் சாலட் செய்துடுங்க அப்படியே பிரஷ் ஜூஸ், ம் எதை சொல்லலாம் ஆப்பிள் ஜூஸ் செஞ்சி முதல்ல கொண்டு வந்து கொடுங்க சீக்கிரம்” என சொல்ல அவர்களும் சொன்னதை செய்ய சென்றார்கள்.
கண்ணகியோ தயங்கி தயங்கி வந்து தலை தாழ்த்தி நின்றாள் அவளைக்கண்ட கோவலனோ
”இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை உட்காரு” என திட்ட அவளோ அதிர்ந்து அமைதியாக அவனுக்கு எதிர்புறம் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
”உன்னை நம்பி கல்லூரியையும் இந்த மொத்த சொத்தையும் ஒப்படைச்சா அதை பார்த்துக்க துப்பில்லை உனக்கு” என திட்ட அவளுக்கு கோபமும் அழுகையும் ஒன்று சேர வந்தது
”என்ன அழற, ஓ இப்படி நீ அழுதா நான் இரக்கப்படுவேன்னு நினைச்சியா மாட்டேன், உனக்கு மட்டும்தான் கஷ்டம் இருக்கா எனக்கும்தான் இருக்கு, மாதவியில்லைங்கற நினைப்பில நான் கவலையா இருந்தாலும் கம்பெனியை நல்லபடியா பார்த்துக்கிறேன் ஆனா நீ கல்லூரியை