இப்படி நாசமாக்கி வைச்சிருக்கியே, இதுக்குதான் உனக்கு தாளாளர் பதவி தந்துட்டு செத்தாரா என் தாத்தா”
”இல்லை அது என்னால அங்க என்ன சொல்றது” என இழுக்க
”பேசாத செய்ற தப்பை செய்துட்டு சமாளிக்காத, ஆமா எப்படியிருந்த நீ இப்ப இப்படியிருக்க, கண்ணகிங்கற பெயருக்கு ஏத்த மாதிரி தைரியமா சட்டு சட்டுன்னு முடிவு எடுக்கற புத்திசாலியா யாருக்கும் அஞ்சாதவளா இருந்த நீயா இப்படி இருக்க”
”எல்லாம் என் தலையெழுத்து”
”இதப்பாரு உன் மேல தப்பை வைச்சிக்கிட்டு தலையெழுத்து மேல பழியை போடாத ஆமா உனக்கு என்னாச்சி ஏன் இப்படியிருக்க”
”சொன்னா உங்களுக்கு புரியாது”
”எது சிலம்புவை பத்திதானே” என கேட்க அவளோ அதிர்ந்து அவனை பார்க்க அவனோ
”உதயமூர்த்தி அங்கிள் என்னை தேடி வந்து நடக்கற எல்லாத்தையும் சொல்லிட்டு கல்லூரியை காப்பாத்துன்னு கெஞ்சி கேட்டுக்கிட்டு போனாரு, சரின்னு உன்னைப் பார்க்க வந்தா நீ நோயாளி போல கிடக்கற, கல்லூரியோ படு மோசமா இருக்கு, இப்படியே போனா கல்லூரியை அரசாங்கமே இழுத்து மூடிடுவாங்க தெரியுமா தெரியாதா” என கேட்க அவளோ சோர்ந்துப் போனாள். அந்நேரம் ஜூஸ் வர
”ஜூஸ் குடி தெம்பு வரட்டும்” என சொல்ல அவளோ வாங்க மறுக்க அவனோ
”வாங்கி குடின்னு சொன்னேன் காதுல விழலை குடி” என சத்தமாக அதட்ட அதில் அவள் பயந்து அந்த ஜூஸ் வாங்கி மடமடவென பருகினாள். நல்ல பசி போல சில நொடிகளில் ஜூஸ் காலியானது அவளோ அவனைப் பார்க்க
”இன்னொரு ஜூஸும் குடி”