(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

சங்கமேஸ்வரனை பார்க்கச் செல்ல தனியாக இருந்த அங்கமுத்துவிடம் வந்தான் அகத்தியன்

  

”எப்படியோ மாமா தப்பிச்சிட்டீங்க போல”

  

”எதை சொல்ற, நான் என்ன செய்தேன்“

  

“சந்தடி சாக்குல உங்களுக்கு எதிரா இருந்த ஃபைலை அபேஸ் பண்றதுக்கு ஆளை ஏற்பாடு செய்தீங்களே, நான் அதைச் சொன்னேன்”

  

”நானா அப்படி எதுவும் செய்யலை நீயா எதையாவது பேசாதப்பா”

  

”எல்லாம் எனக்குத் தெரியும் மாமா, இன்னும் எதுக்கு நடிக்கறீங்க அதான் இங்க யாருமே இல்லையே உண்மையை பேசலாமே“

  

”இதப்பாரு அகத்தியா நான் ஒண்ணும் சும்மா உன் அத்தையை கல்யாணம் செய்துக்கல, அவளால எனக்கு லாபம் இருக்குங்கறதாலதான் அவளுக்கு பிடிக்கற மாதிரியெல்லாம் நடந்துக்கிட்டு அவளுக்கு அடிபணிஞ்சி போற மாதிரியெல்லாம் நடிச்சி அவளே என்னைதான் கல்யாணம் செய்துக்குவேன்னு ஒத்த கால்ல நிக்க வைக்க நான் எவ்ளோ பாடுபட்டேன்னு எனக்குத்தான் தெரியும், கல்யாணம் முடிஞ்சதும் எதுக்காக நான் வீட்டோட மாப்பிள்ளையா வர சம்மதிச்சேன் எல்லாம் இந்த சொத்தை அடையனும்னுதான்”

  

”ஆக ரொம்ப நாளா நீங்க போட்ட திட்டமா இது“

  

”ஆமாம் அப்படித்தான் இப்ப என்னங்கற அதுக்கு”

  

”நான் இருக்கறவரைக்கும் உங்க எண்ணம் பலிக்காது மாமா, கண்டிப்பா ஒரு நாள் உங்களோட முகத்திரையை கிழிச்சி காட்டுவேன், அப்பதான் உங்களை நல்லவர்ன்னு நம்பிக்கிட்டு இருக்கற தாத்தா அப்பா அத்தை 3 பேரும் திருந்துவாங்க, உங்களையும் திருத்துவாங்க“

  

”நீ சொல்றது நடக்கறப்ப பார்க்கலாம் இப்ப போ உன் ஆசைநாயகி என்ன ஆனாளோ

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.