வைச்சிருக்கீங்க சரியா சொன்னேனா” என அவள் கேட்க சங்கமேஸ்வரன் ஆடிப்போனார். அவரால் எதுவும் பேச இயலவில்லை, திக்குமுக்காடிப் போக நாச்சியாவோ உடனே ஆண்டாள் நாச்சியாராக மாறி சுவரில் மாட்டப்பட்ட போட்டோவை தன்னாலே திருப்ப வைத்தாள்,. முன் பக்கம் சங்கமேஸ்வரன் போட்டோ பின்பக்கம் ஆண்டாள் போட்டோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது, இப்போது ஆண்டாள் நாச்சியா போட்டோ தெரியும்படி வைத்துவிட்டு சங்கமேஸ்வரனை பார்க்க அவரோ அந்த போட்டோவைப் பார்த்து கதிகலங்கிப் போனார்
”இனி உங்களால நினைச்சாகூட உங்க மனைவியை ஒளிச்சி வைக்க முடியாது” என சொல்லிய நாச்சியா போட்டோவில் இருக்கும் ஆண்டாள் நாச்சியாரை பார்த்தாள்
”ஏறக்குறைய நான் அவங்களை போலதான் இருக்கேன்னு தோணுது, உங்களுக்கு என்ன தோணுது சார்” என கேட்க சங்கமேஸ்வரனுக்கு வார்த்தை வராமல் தொண்டையில் சிக்கி தவித்தது.
”அவங்க முகசாயல் எப்படி எனக்கு வந்தது, அவங்க சின்ன வயசுல இருக்கறப்ப என்னை போலவே இருந்திருக்காங்களே இது எப்படி சார்” என கேட்க சங்கமேஸ்வரனுக்கு அதிர்ச்சியில் வலிப்பு வந்து தரையில் சரிந்தார்.
உடனே நாச்சியா ஆட்களை அழைத்து சங்கமேஸ்வரனை மருத்துவமனைக்கு அனுப்பியும் வைத்தாள்.
ஏற்கனவே மருத்துவமனையில் ஒரு அறையில் பொன்முடியை படுக்க வைத்திருந்தான் அகத்தியன், இப்போது அடுத்த அறையில் சங்கமேஸ்வரனை படுக்க வைத்திருந்தான். இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டதில் சோர்ந்தேப் போனான்
”ஒரே நாள்ல எவ்ளோ மாற்றம், எவ்ளோ பிரச்சனை, 24 மணி நேரத்துக்குள்ள என் வாழ்க்கையில நடக்க கூடாத எல்லாமே நடந்துப் போச்சி, இன்னும் என்னென்ன நடக்கும்னு தெரியலையே, வீட்ல வேற நாச்சியா தனியா இருக்கா, பாவம் பயந்திருப்பா, என்ன செய்றாளோ என்னவோ, சாப்பிட்டாளான்னு கூட தெரியல அந்த வீட்ல அவளை பார்த்துக்கவும் ஒருத்தரும் இல்லை, இந்த அத்தை வேற சுற்றுலான்னு 10 நாளுக்கு முன்னாடி கிளம்பிப்