”அப்படியா வேற எங்க இடம் இருக்கு”
”அதை தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன செய்யப் போற”
”ஒரு ஆர்வத்தில கேட்டேன், என்னை வரவேற்க கூட இங்க யாருமில்லையே, அட உங்க பொண்ணு எங்க அவங்களை கூட காணலையே”
”என் பொண்ணு அவளோட பொண்ணுகூட சுற்றுலா போயிருக்கா, பாவம் அவளுக்கு இங்க நடந்த விசயம் எதுவும் தெரியாது, தெரிஞ்சா மனசு உடைஞ்சிப் போயிடுவா”
”ஏன் அப்படி”
”பின்ன அவள் பொண்ணைதானே நான் என் பேரனுக்கு பார்த்து வைச்சேன், அவளுக்குத்தான் அகத்தியனோட கல்யாணம் ஆக வேண்டியது நீ முந்திக்கிட்டு வந்துட்ட”
“அப்படியா அப்போ நான் இங்க வேண்டாத விருந்தாளின்னு சொல்லுங்க“
”அது இருக்கட்டும் இது என்ன அலங்காரம்”
”நல்லாயிருக்கா“
”ப்ச் எதுக்காக நீ இப்படி அலங்காரம் செய்துக்கிட்டு நிக்கற, உனக்கு யாரு இந்த பொருட்களை தொட உரிமை தந்தது, யாரை கேட்டு நீ என் மனைவியோட அறைக்குப் போன”
”அதுக்கு காரணம் நான் இல்லை உங்க பேரன்தான் காரணம்“
”அவனா அவன் எப்படி”
”என்னை காப்பாத்த நினைச்சி என்னை கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டாரு, கொஞ்சநாள்