(Reading time: 24 - 48 minutes)
Thirumathi Agathiyan
Thirumathi Agathiyan

பார்த்தார், ஒரு இடத்தில் சுவரில் அவரின் புகைப்படம் பெரிய அளவில் மாட்டப்பட்டிருக்க அதன் முன் நாச்சியா நின்றபடி இருந்தாள்.  நாச்சியா தனக்கு பின்னால் இருந்த சங்கமேஸ்வரனை கவனிக்கவில்லை. சங்கமேஸ்வரனோ அவளைக் கண்டு நடுங்கியபடியே அவ்விடம் சென்றார்.

  

”இங்க என்ன செய்ற” என கேட்க அந்தக் குரல் கேட்டதும் நாச்சியா திரும்பி பார்த்து மென்மையாக புன்னகைத்து

  

”சும்மா வீட்டை சுத்திப்பார்க்கலாம்னு வந்தேன் அவ்ளோதான் தப்பா நினைக்காதீங்க என்னடா இவள் இன்னும் வீட்டை விட்டு போகாம இருக்காளேன்னு யோசிக்கறீங்களா அது ஒண்ணுமில்லை உங்க பையனுக்கு உடம்பு சரியில்லை, உங்க பேரன் அவரை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரி வரைக்கும் போயிருக்காரு, சரி அவர் வந்தபின்னாடி ஒரு வார்த்தை சொல்லிட்டு போகலாமா வேணாமான்னு அனுமதி கேட்டு அப்புறம் ஒரு முடிவு எடுக்கலாம்னு இருக்கேன் தாத்தா” என்றாள்

  

”தாத்தா, நான் உனக்கு தாத்தாவா” என உரும

  

”ஓ மன்னிச்சிடுங்க வேற எப்படி உங்களை கூப்பிடறது”

  

”சார்ன்னு மரியாதையா கூப்பிடு” என்றார் அதிகாரமாக

  

”சரிங்க சார்” என்றாள் அழுத்தமாக

  

”இங்க நின்னு எதுக்காக என் போட்டோவை முறைச்சி முறைச்சி பார்த்துக்கிட்டு இருக்க”

  

”ஓ அதுவா ஒண்ணுமில்லை எல்லா இடத்திலயும் நீங்க உங்க பையன், உங்க பேரன் மட்டும் இருக்கற போட்டோ இருக்கே, ஒரு இடத்தில கூட உங்க மனைவி, உங்க மருமகள் போட்டோன்னு யாருமில்லையே அதான் பார்த்தேன்“

  

”உயிரோட இருக்கறவங்க போட்டோதான் இங்க இருக்கும், இறந்தவங்க போட்டோக்கு இங்க இடம் இல்லை“

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.