”ஆமாம் அவன் நல்லவன்தான் பாவம் அப்பாவி உண்மை தெரியாம இங்க இல்லாத உறவோட வாழ்ந்துக்கிட்டிருக்கற அப்பாவி ஜீவன் ச்சு ச்சு ச்சு”
”அவன் என்னோட பேரன்”
”திருத்தம் பேரனாக்கப்பட்டவன்”
”போதும் வாயை மூடு”
”ஏன் உண்மை கசக்குதோ”
”ஆண்டாள் நான் எப்படிப்பட்டவன்னு உனக்கு நல்லாவே தெரியும், எனக்கு வயசு ஆயிருக்கலாம், இளமை போயிருக்கலாம், முதுமை வந்திருக்கலாம் ஆனா, என் மனசு திடமா இருக்கு, இப்பவும் நான் வைராக்கியத்தோடதான் இருக்கேன் எக்காலத்திலயும் நான் செத்தாலும் சரி உன் ஆசை நிறைவேறாது, நிறைவேறவும் நான் விடமாட்டேன்”
”இத்தனை வருஷம் ஓடியும் முதுமை வந்தும் நீங்க மாறவேயில்லை, அதே வறட்டு புத்தி இந்த புத்தியை மெச்சிதானே என்னோட அப்பா என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து வைச்சாரு ம்”
”அவரை பத்தி நீ பேசாத”
”ஆமாமாம் நீங்கதான் மாமனாருக்கு ஏத்த மருமகனா மாறிப்போனீங்களே, ஆரம்பத்தில எனக்காக வாழறேன்னு உசுரை விட துணிஞ்சீங்க, உங்களை நம்பி நான் பெரிய வேலையில இறங்கினேன், ஊரை சரியாக்க ஆசைப்பட்டேன் கடைசியில என் தலையில மண்ணை போட்டீங்க“
”ஊரை சரியாக்கனுமா ஏன் எதுக்கு ஊருக்கென்ன கேடு அது நல்லாதானே இருக்கு”
”நல்லாவா இருக்கு நாசமா போயிருக்கு, எங்கப்பா காலத்தை விட இப்ப ரொம்ப கேவலமா