”சே உனக்கு எப்படி சொல்லி புரியவைக்கறதுன்னு தெரியலையே, அவள் யார்ன்னு தெரியுமா கீழவீதி பொண்ணுடா அவளை போய் நம்ம வீட்ல சே”
என சொல்ல அகத்தியன் புரிந்துக் கொண்டான்
”ஏன்பா நீங்களுமா தீண்டாமை பார்க்கறீங்க, அவளை மனுஷியா பாருங்கப்பா, இப்ப அவள் என் மனைவி, இந்த வீட்டு மருமகள் அப்படி பாருங்கப்பா”
”என்னால அவளை மருமகளா பார்க்க முடியாது அகத்தியா”
”அப்படின்னா மகளா பாருங்க, இந்த வீடு அவளுக்கு புகுந்த வீடா இல்லாம பிறந்த வீடா இருக்கட்டும், அப்ப வித்தியாசம் காட்ட மாட்டீங்க, அவளும் பிறந்த வீடு புகுந்த வீடுன்னு வித்தியாசம் இல்லாம வாழ முடியும்”
”என்னது அவளை நான் என் மகளா பார்க்கனுமா” என அதிர்ச்சியில் சத்தமாக கேட்க அகத்தியனோ
”மருமகளோ மகளோ எப்படி பார்த்தா என்னப்பா”
”எனக்கு அவளை என் மகளா பார்க்க பிடிக்கலை அகத்தியா”
”வேணாம் அப்ப மருமகளா பாருங்கப்பா”
”அப்படியும் பார்க்க பிடிக்கலை” என அந்த அறை அதிர கத்தினார் உடனே அகத்தியனோ
”அப்பா நிதானமா பேசுங்க தாத்தா ஓய்வுல இருக்காரு, அவரை ஏன் தொந்தரவு செய்யனும்”
”அப்பா மட்டும் எழுந்து அந்த நாச்சியாவை இந்த வீட்ல பார்த்தா பெரிய பூகம்பமே வெடிக்கும் அகத்தியா, அதுக்குள்ள மரியாதையா அவளை இங்கிருந்து அனுப்பிடு”