ஆகாது, இவள் ஒரு சாபகேடு இவளை விரட்டிடு விரட்டிடு” என தொண்டை கிழிய கத்தினார்.
தந்தையின் மனநிலை இந்தளவு மாறியிருப்பதை நினைத்து கலங்கினான் அகத்தியன். பொன்முடி கத்திய கத்தலில் தாத்தா கண்விழித்தார்.
ஆரம்பத்தில் மசமசவென தெரிந்த காட்சிகள் சில நொடிகளில் தெளிவாக தெரிந்தது, முக்கியமாக அவருக்கு முன் நாச்சியா நின்றிருந்தாள், அவளை அந்த அலங்காரத்தில் காணவும் அவருக்கு தலை சுற்றியது.
”நீயா நீயா நீயா” என அவர் அலற அவளோ மென்மையாக
”நான்தான் நான்தான் நானேதான் வந்துட்டேன், எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன், எப்படியிருக்கீங்க நலம்தானே” என அவள் பேச பேச அரண்டுப் போனார். இதை அகத்தியன் கவனிக்கவில்லை அதற்குள் அவன் பொன்முடியை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறியிருந்தான்.
தனியாக மாட்டிக் கொண்டார் சங்கமேஸ்வரன். அவரின் படுக்கையின் ஒரு ஓரத்தில் அவரை பார்த்தபடி அமர்ந்த நாச்சியாவோ
”விதியை பார்த்தீங்களா எப்படியெல்லாம் நம்மளை சந்திக்க வைச்சிருக்குன்னு”
”போ போயிடு இங்கிருந்து போயிடு“
”போகவா நானா ஆஆ எதுக்கு நான் போகனும், போக வேண்டியவங்கதான் போகனும், நான் இங்க வாழ வந்தவ என்னால இங்கிருந்து போக முடியாது” என்றாள்
”நீ நீ நீயாரு”
”இன்னுமா உங்களுக்கு தெரியலை அதுசரி வயசானதால நிறைய மறந்துட்டீங்க போல, நான்தான் நல்லா பாருங்க உங்களோட ஆண்டாள் நாச்சியா” என சொல்லி முடிக்கவும்