”அனுப்பவா எங்க அனுப்பறது“
”அவள் எங்கிருந்து வந்தாளோ அங்கயே அனுப்பு”
”என்னப்பா புரியாத மாதிரி பேசறீங்க, அவள் என் மனைவி திருமதி அகத்தியன், ஊர் உலகத்துக்கு முன்னாடி அவளுக்கு என் மனைவின்னு அங்கிகாரம் கொடுத்திருக்கேன், இப்ப போய் அவளை வீட்டைவிட்டு அனுப்பினா ஊர் அவளை தப்பா பேசாதா, மறுபடியும் அவளை பஞ்சாயத்துல நிக்க வைச்சி ஊருக்கு நேர்ந்து விடற தண்டனையை தருவாங்க, அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், நான் இந்த வீட்ல இருக்கறவரைக்கும் நாச்சியாவும் இங்கதான் இருப்பா, என் மனைவியாதான் இருப்பா” என உறுதியாகச் சொல்ல பொன்முடியால் அதைத் தாங்க முடியாமல் தன் தலையை இரு கையாலும் அழுத்தமாக பிடித்துக் கொண்டு
”உனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை, இப்ப நடக்கற எல்லாமே ஏற்கனவே கணிச்சி சொன்னது”
”கணிச்சதா”
”ஆமாம் ஜோசியர் சொன்னான், நீ பிறந்தப்பவே உன் ஜாதகப்படி உன் எதிர்காலத்தில என்னெல்லாம் நடக்கும்னு அப்படியே சொன்னான், அவன் சொன்னபடியே அப்படியே நடக்குது, நடந்தவரைக்கும் போதும் இதோட நிறுத்திக்கலாம், மேற்கொண்டு ஜோசியர் சொன்னது நடக்கக் கூடாது, அப்படி நடக்காம இருக்கனும்னா அந்தப் பொண்ணு இங்க இருக்க கூடாது, அவளை அனுப்பிடு, அவளை இப்பவே அனுப்பிடு, அப்பா நான் சொல்றேன், அவளை அனுப்பிடு அகத்தியா அவளை அனுப்பிடு” என அகத்தியனை பிடித்து உலுக்க அவனோ தன் தந்தையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு
”அப்பா என்னாச்சி உங்களுக்கு ஏன் பைத்தியக்காரன் போல நடந்துக்கிறீங்க, என்னிக்கோ எவனோ சொன்ன விசயம் இன்னிக்கு நடந்திடுச்சிங்கறதுக்காக நாச்சியாவை விரட்டனுமா முடியாதுப்பா“
”ஐயோ நான் சொல்றதைக் கேளு, அவள் இங்க இருந்தா இந்த வீட்டுக்கும் சாபகேடு, ஊருக்கும்