இருக்கு, இதுக்கு காரணம் சுயநலம் பிடிச்ச உங்க எண்ணங்கள்தான்”
”நான் ஒண்ணும் இந்த ஊரை மாத்தலையே, உன் பூட்டன் பாட்டன் வாழ்ந்தப்ப எப்படியிருந்ததோ அப்படியேதான் இந்த ஊர் இருக்கு, இந்த ஊரை மாத்தாம வைச்சிருக்கனும்னு பரம்பரை பரம்பரை சொல்லப்பட்டிருந்த விசயத்தை உங்கப்பாவும் நானும் கட்டிக்காப்பாத்திக்கிட்டு வரோம், எனக்கு அடுத்து என் மகன் அவனுக்கு அடுத்து அகத்தியன் இப்படியே தலைமுறை தலைமுறையா கொடுத்த வாக்கை நாங்க காப்பாத்திக்கிட்டே வருவோம், யாராலயும் இதை மாத்த முடியாது”
”முடியும்”
”உன்னாலயா”
”நாச்சியாவால”
”அவளா”
”ஆமாம் நிறைவேறாத ஆசையோட ஆத்மாவா அலையற நானும் உண்மையறியாம உறவை இழந்த நாச்சியாவும் இணைந்துதான் இந்த ஊரை மாத்தப் போறோம், உங்களோட வாக்கை தவிடு பொடியாக்கவே நான் நாச்சயா உருவத்தில வந்திருக்கேன், அவளை உங்களால எதுவும் செய்ய முடியாது, அவளுக்கு துணையா நான் இருக்கேன் என்னிக்கு என்னோட ஆசை நிறைவேறுதோ அப்போ அவளை விட்டு நான் போயிடுவேன், அதுவரைக்கும் நான் இங்கதான் இருப்பேன்”
”அதுக்கு நான் விடமாட்டேன், இது என்னோட வீடு நீ இங்க இருக்க கூடாது, நாச்சியாவை நான் விரட்டத்தான் போறேன்”
”மறுபடியும் மறுபடியும் தப்புத்தப்பா பேசறீங்க பார்த்தீங்களா, எங்க உங்க மனசாட்சி தொட்டுச் சொல்லுங்க, இது உங்க வீடா, நீங்க பிறந்த வீடா இது சொல்லுங்க” என அறை அதிர கத்த அதில் நடுங்கிப் போனார் சங்கமேஸ்வரன்