”சின்னம்மான்னு வாய் நிறைய கூப்பிடதான் எனக்கு பிடிச்சிருக்குன்னு அப்பா சொன்னாரு, பெரிய வீட்ல அதான் இந்த வீட்ல வேலை செஞ்ச காரணத்தால உங்க மனைவியை பார்த்து மரியாதை வந்திருக்கும். அவங்க மேல இருந்த விசுவாசத்தாலயும் அவரை போல நான் இருக்கற காரணத்தாலயும் கூட என்னை அப்படி கூப்பிட்டிருக்கலாம், இப்ப கூட அவங்க என்னை சின்னம்மான்னுதான் கூப்பிடுவாங்க தெரியுமா தாத்தா”
”போதும் இன்னொரு முறை என்னை தாத்தான்னு கூப்பிட்ட உன்னை கொன்னுடுவேன்” என உக்கிரமாக கத்த அடுத்த நொடி அவ்விடமே அப்படியொரு பேரமைதிக்கு ஆட்கொண்டது. சின்ன சத்தம் கூட இல்லை, காற்று வீசும் சத்தமும் இல்லை, சங்கமேஸ்வரனோ சுற்றி முற்றி பார்த்து அதிர்ந்து நாச்சியாவை பார்க்க இப்போது அவள் உக்கிரமான முகத்துடன் இருந்தாள்
”என்னை கொன்னுடுவியா நீ, உன்னை தாத்தான்னு கூப்பிட முழு உரிமை நாச்சியாக்கு மட்டும்தான் இருக்கு, கூடிய சீக்கிரம் நீ மறைச்ச உண்மையை வெளி உலகத்துக்கு கொண்டு வரேன்” என உக்கிரமாக பேசி முடிக்க சங்கமேஸ்வரன் அரண்டுப் போய்
”வேணாம் வேணாம்” என அலற அடுத்த நொடி நாச்சியாவோ
”தாத்தா ஓ மன்னிச்சிடுங்க சார் சார் என்னாச்சி சார்” என கேட்க சங்கமேஸ்வரனோ நாச்சியாவை திகிலுடன் பார்த்தார்
”நீ யாரு”
”சரியா போச்சி சார் நான்தான் நாச்சியா” என சொல்ல சங்கமேஸ்வரன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
”எனக்கு ஒரு சின்ன ஆசை நிறைவேத்துவீங்களா சார்” என கேட்டாள்
”என்ன ஆசை“
”உங்க மனைவியை பார்க்கனும்னு ஆசையா இருக்கு, எப்படியும் அவங்க நினைவா அவங்க