(Reading time: 8 - 16 minutes)
Oru kili uruguthu
Oru kili uruguthu

கலக்குறடா தம்பி! எப்போவும் இதே மாதிரி இருக்கனும், சரியா?” என்றாள் சத்யா.

  

உங்க வீட்டுப் பக்கத்துலேயே இருக்க போறோம், அக்கா. அஹல்யாவை ஏதாவது சொன்னா நீங்க விட்ருவீங்களா என்ன?”

  

அந்த பயம் இருக்கட்டும். நீ போ, போய் ரெடி ஆகு. முகூர்த்த நேரம் பக்கத்துல வந்திருச்சு!”

  

அபினவ் அஹல்யாவின் அக்கா கணவரையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றான்.

  

சக்தி, அஹல்யா இப்போ பணக்கார அஹல்யா தெரியுமா உனக்கு?" சத்யா சக்தி பக்கம் பார்த்து கேட்டாள்!

  

அதென்ன சத்யா?”

  

உன் போலி டாக்டர் அஹல்யாக்கு அந்த இடத்துக்காக ஹாஸ்பிட்டல்ல 25% ஷேர் கொடுத்திருக்கார். அஹல்யா வேண்டாம்னு தான் சொன்னா. நானும் இவருமா அவளை வாங்கிக்க வச்சோம்!”

  

நல்ல விஷயம் தான் சத்யா!”

  

அஹல்யா தங்கி இருந்த அந்த வீடை ஏதாவது பப்ளிக் சர்வீஸ்க்கு யூஸ் செய்துக்க சொல்லி இருக்கா. நான் ஒரு ப்ளான் வச்சிருக்கேன்!”

  

என்ன ப்ளான்?”

  

நம்ம இரண்டுப் பேரு ஜோடி மாதிரி கெமிஸ்ட்ரியோட ப்ரைவேட் டிடெக்டிவ்ஸ் மதியூர்ல இருந்தா எப்படி இருக்கும்?” சத்யா கண்களை மின்ன கேட்டாள்!

  

ஈ ஓட்டும்!” என்றாள் சக்தி அசிரத்தையாக!

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.